கிறிஸ்தவ வாழ்க்கையில், எதிர்ப்பு என்பது இருக்க கூடியது. நெகேமியா எருசலேமைச் சுற்றி சுவரைக் கட்டவும் வாயில்களை நிறுவவும் தீர்மானித்தபோது எதிர்ப்பை எதிர்கொண்டார். அவரது அற்புதமான வாழ்க்கை மற்றும் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இடிந்து கிடந்த எருசலேமைச் சுற்றி 52 நாட்களில் சுவர்களைக் கட்டியது மாபெரும் விஷயம் (நெகேமியா 6:15).
தொந்தரவு அளித்தல்
நெகேமியா இஸ்ரவேல் மக்களின் நலனைத் தேட வந்ததைக் கேள்விப்பட்ட, ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது (நெகேமியா 2:10) கலக்கமடைந்தனர், மனச்சோர்வடைந்தனர்.
இகழ்தல்
ஓரோனியனான சன்பல்லாத்தும், மற்றும் அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் மற்றும் அரபியனான கேஷேம் ஆகியோர் ராஜாவிற்கு எதிராக நெகேமியா கலகம் செய்ததாகக் குற்றம் சாட்டி கேலி செய்தனர் (நெகேமியா 2:19-20)
இழிவான மனப்பான்மை
சுவர் கட்டும் போது மூவரும் கேலி செய்தனர், பரியாசம் பண்ணினர், பின்னர் அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றனர் (நெகேமியா 4:1-6).
நேரடி தாக்குதல்
எருசலேமின் மதில்களை சீர்செய்யும் பணி நடந்துவருவதையும், உடைப்புகள் மூடப்படுவதையும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரேபியர்களும், அம்மோனியர்களும், அஸ்தோதியரும் கேள்விப்பட்டபோது, மிகவும் கோபமடைந்தார்கள். நேரடியாக தாக்கி குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர் (நெகேமியா 4:7-9).
கவனத்தை திசை திருப்பும் தந்திரங்கள்
அவர்கள் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தூதுவர்களை அனுப்பினர். அவ்வாறு செய்வதன் மூலம், நெகேமியா வேலையை விட்டுவிட்டு சென்றுவிடுவார், இதனால் வேலை நிறுத்தப்படலாம் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இது நான்கு முறை நடந்தது, ஐந்தாவது முறை, அவர்கள் முத்திரை போடாத கடிதத்தை அனுப்பினார்கள் (நெகேமியா 6:1-9).
அவதூறு உண்டு பண்ணுதல்/அவகீர்த்தி
உன்னை யாரோ கொல்லப் போவதாகச் சொல்லி அனுப்பினார்கள். ஆலயத்தில் பூட்டிய கதவுகளுக்குள்ளே கூட்டம் நடத்த நெகேமியா வர வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்கள் நெகேமியாவை தவறாக வழிநடத்தவும், அவருக்கு எதிராக பொய் தீர்க்கதரிசனம் சொல்லவும் கள்ளத் தீர்க்கதரிசிகளை அமர்த்தினார்கள் (நெகேமியா 6:10-16).
எதிர்க்கும் நெகேமியா
நெகேமியா பயன்படுத்திய முதல் மற்றும் முதன்மையான ஆயுதம் ஜெபத்தில் விசுவாசம், தேவனுக்கு பதில் அளித்தல், விடாப்பிடியான ஜெபம். சூழல் மற்றும் நேரத்தின்படி, அவர் நாட்கள் மற்றும் சில நேரங்களில் சில நொடிகள் கூட ஜெபம் செய்தார். இரண்டாவது, அவர் எதிரிகளால் மிரட்டப்பட்ட போதும் அஞ்சவில்லை. ஒரு பழமொழி உள்ளது; "மரணத்தைக் கண்டு அஞ்சினால் அதுவே நிகழும்". மூன்றாவது, எதிரிகளின் சதிகளை ஆராய்ந்து அவற்றை திறம்பட எதிர்கொண்டார். நான்காவது, அவர் சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவராகவும், புறாவைப் போல கபடற்றவராகவும் இருந்தார்.
நான் நெகேமியாவைப் போல எதிர்ப்பைக் கையாளுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்