நெகேமியா 6:1-9

6:1 நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,
6:2 நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால், எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.
6:3 அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
6:4 அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.
6:5 ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.
6:6 அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,
6:7 யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூமுவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் அந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.
6:8 அதற்கு நான் நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.
6:9 அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,




Related Topics



எதிர்க்கும் சக்திகள்-Rev. Dr. J .N. மனோகரன்

கிறிஸ்தவ வாழ்க்கையில், எதிர்ப்பு என்பது இருக்க கூடியது.  நெகேமியா எருசலேமைச் சுற்றி சுவரைக் கட்டவும் வாயில்களை நிறுவவும் தீர்மானித்தபோது...
Read More



நான் , அலங்கத்தைக் , கட்டிமுடித்ததையும் , இனி , அதிலே , திறப்பு , ஒன்றுமில்லை , என்பதையும் , சன்பல்லாத்தும் , தொபியாவும் , அரபியனான , கேஷேமும் , எங்களுக்குண்டாயிருந்த , மற்றப் , பகைஞரும் , கேள்விப்பட்டபோது , , நெகேமியா 6:1 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 6 TAMIL BIBLE , நெகேமியா 6 IN TAMIL , நெகேமியா 6 1 IN TAMIL , நெகேமியா 6 1 IN TAMIL BIBLE , நெகேமியா 6 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 6 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 6 TAMIL BIBLE , NEHEMIAH 6 IN TAMIL , NEHEMIAH 6 1 IN TAMIL , NEHEMIAH 6 1 IN TAMIL BIBLE . NEHEMIAH 6 IN ENGLISH ,