ஒரு சோம்பேறி ஒருவனுக்கு வயல் இருந்தது, அந்த சோம்பேறித்தனம் அவனின் நிலத்திலும் எதிரொலித்தது, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோம்பேறிகளுக்கு சரீர ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் எதையுமே குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அதாவது தாமதமின்றி துரிதமாக செய்யும் உணர்வு இல்லை (நீதிமொழிகள் 24: 30-34). இதற்கு நேர்மாறாக, எல்லா வளங்களையும் தேவ மகிமைக்காகப் பயன்படுத்துபவர்கள் உக்கிராணக்காரர்கள்.
1) முட்கள்:
ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியால் முள்ளும் குருக்கும் மனிதகுலத்தின் மீது விழுந்த சாபத்தின் விளைவாகும் (ஆதியாகமம் 3:18). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விதை, முட்களுக்கு மத்தியில் விழும் தேவனுடைய வார்த்தை பலனற்றதாகிறது. முட்கள் என்பது வாழ்க்கையின் கவலைகள் மற்றும் செல்வத்தின் வஞ்சகம் போன்றது, அது தேவ வார்த்தையை நெரிக்கும் (மத்தேயு 13:22). உலகச் செல்வங்களைத் தேடுவது ஒரு மாயக்காற்றைப் பின்தொடர்வது அல்லது எலிப் பந்தயத்தில் ஈடுபடுவது போன்றதாகும்.
2) களைகள்:
இரவில், எதிரி கோதுமைக்கு இடையில் களைகளை நடுகிறான் (மத்தேயு 13:24-30). சில களைகள் தாமாகவே வளருவதுண்டு. மண்ணிலிருந்து கோதுமை வளரத் தேவையான சிறந்த தாதுக்களையும் நீரையும் களைகள் உறிஞ்சிக் கொண்டு வறட்சியாக்குகின்றன. ஆக, ஒரு தோட்டக்காரர் அல்லது கவனக்குறைவான ஒரு விவசாயி, தானியத்தின் உண்மையான தாவரங்களை மூழ்கடித்து, அதிகப்படியான களைகளை தான் காண முடியும். பயிர்களின் மகசூல் வெகுவாகக் குறையும் அல்லது இழக்கப்படும்.
3) உடைந்த சுவர்கள்:
சுற்றித் திரிகின்ற கால்நடைகள் உடைந்த சுவர்கள் வழியாக உள்ளே புகுந்து பயிர்களை நாசம் பண்ணும். திருடர்கள் உள்ளே நுழைந்து அறுவடையை எடுக்கவும் முடியும், உண்மையைச் சொல்லப் போனால், உடைந்த சுவர்கள் ஊடுருவும் நபர்களை அழைக்கின்றன. சுவர்கள் இல்லாத எருசலேம் நகரத்தை அவமானமாகவும் பாதுகாப்பற்றதாகவும் கருதினார் நெகேமியா (நெகேமியா 1:3).
4) வறுமை:
இப்படி அலட்சியமாக இருப்பவர்களுக்குத் திருடனைப் போல வறுமை வந்து சேரும். வறுமை என்பது நிலம் அல்லது வாய்ப்புகள் அல்லது வளங்கள் அல்லது திறன்கள் இல்லாததால் அல்ல. "வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல,சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்". "தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்" (நீதிமொழிகள் 28:19; 14:23; 20:4; 26:13-16).
5) பற்றாக்குறை:
"சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது" (நீதிமொழிகள் 20:4). நுகர்வுப் பொருட்கள் ஏராளமாக இருக்கும் உலகில், தேவ வார்த்தைக்கு உண்மையான பற்றாக்குறை உள்ளது. ஆம், கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் (ஆமோஸ் 8:11).
நான் ஒரு உக்கிராணக்காரனா அல்லது சோம்பேறியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்