தானியேலின் கவிதை

இது தானியேலின் சிறு சங்கீதம் அல்லது கவிதை எனலாம், தேவன் நேபுகாத்நேச்சாரின் கனவையும் அதன் விளக்கத்தையும் வெளிப்படுத்தியபோது தானியேல் துதித்துப் பாடுகிறான் (தானியேல் 2:20-23). அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்; அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; என்பதையும், சரித்திரத்தில் எவ்வளவு ஆற்றல் மிக்கவர் என்பதையும் அவரின் கிரியையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

1) அவர் சமயங்களை மாற்றுகிறார்:
பிறப்பதற்கும், இறப்பதற்கும், நடுவதற்கும், நட்டத்தை பிடுங்கவும், கொல்லுவதற்கும், குணப்படுத்துவதற்கும், இடிக்கவும், கட்டவும், அழுவதற்கும், சிரிப்பதற்கும், புலம்புவதற்கும், நடனமாடுவதற்கும், கற்களை எறிவதற்கும், கற்களை சேகரிப்பதற்கும், தழுவுவதற்கும், தழுவுவதைத் தவிர்ப்பதற்கும், தேடுவதற்கும், இழக்கவும், காப்பாற்றவும், எறிந்து விடவும், கிழிக்கவும், தைக்கவும், மௌனமாயிருக்கவும், பேசுவதற்கும், சிநேக்கிக்கவும், பகைக்கவும், யுத்தம் பண்ணுவதற்கும் மற்றும் சமாதானம் பண்ணுவதற்கும் காலங்கள் உண்டு என்பதாக பிரசங்கி எழுதுகிறான் (பிரசங்கி 3:2-8).

2) அவர் காலங்களை மாற்றுகிறார்:
உலகில் காலநிலை பருவங்கள் மட்டுமல்ல, சமூக வாழ்க்கையுடன் இணைக்கப்பட்ட மற்றவைகளும் உள்ளன.  மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகிய காலங்கள் உள்ளன.  போர், அழிவு, சேதம் மற்றும் குழப்பம் போன்ற பருவங்கள் உள்ளன.  இஸ்ரவேல் ஜனங்கள் சமாதானத்துடன் மகிழ்ந்திருந்தனர் அது எப்போது என்றால்  நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து இருந்தபோது, ஆனால் அவர்கள் எப்போது கர்த்தரையும் அவருடைய நியமனங்களையும் நிராகரித்தார்களோ அப்போது நியாயந்தீர்க்கப்பட்டார்கள்.

3) அவர் ராஜாக்களைத் தள்ளுகிறார்:
நானூறு ஆண்டுகளாக இஸ்ரவேல் புத்திரரை இரக்கமின்றி ஒடுக்கிய எகிப்துக்கு செய்தது போல், நீதியுள்ள நியாயாதிபதியாகிய தேவன் ராஜாக்களை அகற்றி, நாடுகளின் அதிகாரத்தைப் பறிக்கிறார்.

4) அவர் ராஜாக்களை ஏற்படுத்துகிறார்:
ஆட்சியாளர்களை அதிகாரத்தில் நியமிப்பவர் இறையாண்மையுள்ள தேவன். பொல்லாத அரசர்களால் கூட தேவனின் அதிகாரம் கிடைக்காதவரை எதுவும் செய்ய முடியாது.  கர்த்தராகிய இயேசு, பொந்தியு பிலாத்துவிடம் பரத்திலிருந்து அதிகாரம் வழங்கப்படாவிட்டால், அவன் செல்வாக்கு அற்றவன் என்பதை நினைவூட்டினார் (யோவான் 19:11).

5) அவர் ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுக்கிறவர்:
புரிந்துகொள்ளத் தேடும் தம்முடைய மக்களுக்கு தேவன் ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறார். யோசேப்பு சொப்பனத்தை விளக்குவதற்கு தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்றான் (ஆதியாகமம் 41:16). 

 6) அவர் வெளிப்படுத்துகிறார்:
தேவன் தன்னை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார். தேவன் தனது சிருஷ்டிப்பு, அவரது பிரமாணம் மற்றும் அவரது குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தன்னை வெளிப்படுத்தினார். ஆழமான மற்றும் மறைவான விஷயங்கள் உள்ளன, அவர் தனது நோக்கத்தின்படி வெளிப்படுத்துகிறார்.

 7) அவர் அறிவார்:
இருளிலிருக்கிறதை தேவன் அறிவார், அதாவது தீமையை அவர் அறிவார் மற்றும் வெளிச்சத்திற்கு வருகிறது. அவர் எல்லா துன்மார்க்கத்தையும் நியாயந்தீர்க்கிறார்,  மனிதர்களின் ஆத்துமாவில் இருக்கும் இரகசிய இருண்ட பகுதிகளில் என்ன இருக்கிறது என்பதையும் தேவன் அறிவார்;  அவர் தனது நோக்கங்களையும் இதய நோக்கங்களையும் மதிப்பிடுகிறார் (யோவான் 2:25; நீதிமொழிகள் 16:2; 21:2). 

தானியேலோடு இணைந்து இவ்வளவு பெரிய தேவனை நான் துதித்து ஸ்தோத்தரிக்க வேண்டாமா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download