ஒரு சிறுவன் சாலையோரம் தேநீர் விற்றுக்கொண்டிருந்தான். ஒரு பணக்காரர் அவனை ஊக்குவிப்பதற்காக தேநீர் அருந்திவிட்டு, தேநீருக்கான கட்டணத்தோடு கூடுதலாகவும் பணம் கொடுப்பார். சிறுவன் ஒவ்வொரு நாளும், வேதாகம கதைகளைப் பகிர்ந்து கொள்வான், தான் ஒரு பணக்கார கடவுளின் குழந்தை என்று குறிப்பிடுவான். வெகு நாட்களுக்குப் பிறகு, பணக்காரர் அவனிடம்; “தினமும் எனக்கு நல்ல கதைகள் சொல்லுகிறாய். ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடினமாக உழைக்கிறாய். உன் விதவை தாய் மற்றும் உடன்பிறந்தவர்களை கவனித்துக்கொள்வது உன் பொறுப்பாக இருக்கிறது; ஆனால் நீ பெரிய செல்வந்தனாக உன் பணக்கார கடவுள் ஏன் உதவவில்லை?" என்றார். அதற்கு சிறுவன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, "ஐயா, என் தேவன் கொடுத்தார், ஆனால் என் மூத்த சகோதரர்கள் தங்களுக்காக வைத்துக் கொண்டார்கள்”. ஆம், நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட செல்வந்தர்கள், நல்ல சலுகை பெற்ற கிறிஸ்தவர்கள் ஏழை, விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய சகோதர சகோதரிகளுக்கு உதவுவதில்லை.
பகிர் மற்றும் கவனி:
கிறிஸ்தவ ஐக்கியம் என்பது பகிர்ந்து கொள்வதும் மற்றும் அக்கறை செலுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டது. விசித்திரமாக, பல கிறிஸ்தவர்கள் ஆசாரியன் மற்றும் லேவியரைப் போன்றவர்கள், பகிர்ந்து கொள்ளும் மற்றும் அக்கறையுள்ள நல்ல சமாரியன் போன்றவர்கள் அல்ல. நல்ல சமாரியன் செய்தது போலச் சென்று செய்யும்படி ஆண்டவர் தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் (லூக்கா 10:29-37).
தசமபாகம்:
லேவியர்களுக்கு, தசமபாகம் என்பது தேவனிடமிருந்து வரும் ஊதியம், வரம் அல்ல. அந்த வகையில் லேவியர்களுக்கு, ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமை இருந்தது, அது நற்செய்தி அறிவிக்கும் ஊழியர்களுக்கும் பொருந்தும் (1 கொரிந்தியர் 9:7-15).
பகுப்பாய்வு:
இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரங்களில் 603550 போர்வீரர்கள் இருந்தனர். லேவியர்கள் 22000 பேர். 603550 குடும்பங்களின் தசமபாகம் 22000 குடும்பங்களை ஆதரித்தது. அதாவது 27 இஸ்ரவேலர் குடும்பங்கள் ஒரு லேவியரை ஆதரித்தன என்றால், ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 10000 என்று வைத்துக் கொள்வோம், அப்போது தசமபாகம் ரூ. 603550000. அதில் பத்தில் ஒரு பங்கு ஆசாரியர்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு ஏழைகளுக்கும் சென்றது. ஒரு சராசரி லேவியருக்கு ரூ. 16460 (எண்ணாகமம் 18:25-32; உபாகமம் 14:28-29). இஸ்ரவேலர்கள் அனைவரும் தசமபாகம் கொடுத்தால்தான் இந்த கணக்கிற்கு வரும். உண்மையில், பலர் கொடுக்கவில்லை, அதனால் தான் மல்கியா தீர்க்கதரிசி அவர்களைக் கடிந்துகொண்டார் (மல்கியா 3:8-10).
ஏழை:
மூன்றில் ஒரு பங்கை ஏழைகளுக்குக் கொடுத்த பிறகு, லேவியர்கள் சராசரி இஸ்ரவேலரை விட அதிகமாக இருப்பார்கள். இன்று, பல சபைகளில் மூன்றில் ஒரு பங்கு ஏழைகளுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு நேர்மாறாக, சில நற்செய்தி பணியாளர்கள் வறுமையில் வாழ்கின்றனர், மற்றவர்கள் சம்பந்தப்படாத ஆடம்பரத்தில் வாழ்கின்றனர்.
ஏழைகளிடம் நான் பகிர்ந்துகொள்கிறேனா? அக்கறையாக கவனிக்கிறேனா
Author: Rev. Dr. J .N. மனோகரன்