யோவான் 15:9-10 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் பிதாவின் அன்பில் நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் இருங்கள்.
2. பிதாவானவர் அனுப்புகிறதுபோல குமாரனும் அனுப்புகிறார்
யோவான் 20:21-22 பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்
3. பிதாவானவர் ஏற்படுத்துகிறதுபோல குமாரனும் ஏற்படுத்துகிறார்
லூக்கா 22:29-30 என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியிலே போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங் களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனத்தில்மேல் உட்காருவீர்கள்
4. பிதாவானவர் செய்கிறதுபோல குமாரனும் செய்கிறார்
யோவான் 5:17,19 பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதுஎதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய் செய்யமாட்டார். அவர் எவை களைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்
5. பிதாவானவர் உயிர்ப்பிக்கிறதுபோல குமாரனும் உயிர்ப்பிக்கிறார்
யோவான் 5:21 பிதாவானவர் மரித்தோரை எழும்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
யோவான் 11:43-44 இயேசுவானவர்: லாசருவை உயிரோடே எழுப்பினார்
6. பிதாவானவர் ஜீவனாயிருக்கிறதுபோல குமாரனும் ஜீவனாயிருக்கிறார்
யோவான் 5:26 பிதாவானவர் தம்மில் தாமே ஜீவன் உடையவராய் இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவன் உடையவராய் இருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனு டைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
7. பிதாவானவர் போதிக்கிறதுபோல குமாரனும் போதிக்கிறார்
யோவான் 8:28 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
Author: Rev. M. Arul Doss