நாம் பாடும் கீதத்தில் மரியாளின் பாடல்களில் இருந்த அர்த்தம், அழகு, அனுபவம் இருக்க வேண்டும். மரியாளின் பாடல்களில் இருந்த காரியங்கள்…
அ. பாடுகிற மரியாளிடம் தகுதி இருந்தது
• ஆண்டவருடைய அடிமை – லூக்கா 1:38
• ஆண்டவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தாள் - லூக்கா 1:38
• ஆசீர்வதிக்கப்பட்டவள் - லூக்கா 1:42
• ஆண்டவருடைய தாயார் – லூக்கா 1:43
ஆ. பாடுகிற பாடலில் தனித்துவம் இருந்தது
• கர்த்தருக்குப் புதுப்பாட்டை பாடவேண்டும் - சங். 33:3, ஏசா. 42:10, வெளி. 5:9
• புதுப்பாட்டை கர்த்தர் கொடுக்கிறார் – சங். 40:3
இ. பாடுகிற பாடலைக் கேட்கிறவர்களிடம் தாக்கம் ஏற்பட்டது
• கருவில் உள்ள குழந்தை களிப்பாய் துள்ளியது – லூக்கா 1:41,44
• எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிறைந்தாள் – லூக்கா 1:41
• பாடுகிற மரியாளை எலிசபெத் ஆசீர்வதித்தாள் - லூக்கா 1:42
• பாடலைக் கேட்ட எலிசபெத்திற்கு தன்நம்பிக்கை பிறந்தது – லூக்கா 1:45
Author. Rev. Dr. C. Rajasekaran