1. அவர் உயிருள்ளவர்
யோவான் 2:19 இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக் குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
யோவான் 11:25 நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
யோபு 19:25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியில் நிற்பார் என்றும் அறிந்திருக்கிறேன்
வெளிப். 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடி...
அப்போஸ்தலர் 1:3 இயேசு பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ் தலருக்குத் தரிசனமாகி... தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
2. அவர் உயிரூட்டுகிறவர்
எசேக்கியேல் 37:5 கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள். எசேக்கியேல் 37:10 ஆவி அவர்களுக்குள் (உலர்ந்த எலும்புகளுக்குள்) பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
2இராஜாக்கள் 13:21 எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது அந்த மனுஷன் உயிரடைந்து எழுந்தான்.
லூக்கா 7:11-15 நாயீன் ஊர் விதவை மகன்; லூக்கா 8:41,49-55 ஜெப ஆலயத்தலைவனாகிய யவீருவின் மகள்; யோவான் 11:11-44 லாசருவே, வெளியே வா என்றார். மரித்தவன் வெளியே வந்தான்.
3. அவர் உயிர்ப்பிக்கிறவர்
யோவான் 5:21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவனவர்களை உயிர்ப்பிக்கிறார்.
சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது
சங்கீதம் 119:25,107 வசனத்தின்படி; சங்கீதம் 119:37 வழிகளில்; சங்கீதம் 119:40 நீதியால்; சங்கீதம் 119:88,159; கிருபையின்படியே; சங்கீதம் 119:149 நியாயத்தீர்ப்பின்படி; சங்கீதம் 119:154 வார்த்தையின்படி ; சங்கீதம் 119:156 நியாயங்களின்படி; சங்கீதம் 138:7 துன்பத்தில்; ஓசியா 6:2 உயிர்ப்பிப்பார்.
Author: Rev. M. Arul Doss