1. பழையதைக் களைந்துப்போடுங்கள்
எபேசியர் 4:22,25 (22-33) அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துப்போட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக் கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்
கொலோசெயர் 3:9,10 (1-15) ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதி ருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டி ருக்கிறீர்களே.
சகரியா 3:4 அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன் மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார். பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னில் இருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.
2. பழையதைக் கழித்துப்போடுங்கள்
1கொரிந்தியர் 5:7,13 (6-13) ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயி ருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப் போடுங்கள்.
3. பழையதை அறைந்துவிடுங்கள்
ரோமர் 6:6(1-11)நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக் கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக் கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
Author: Rev. M. Arul Doss