1கொரிந்தியர் 5:6-13

5:6 நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
5:7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
5:8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
5:9 விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
5:10 ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
5:11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
5:12 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
5:13 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.




Related Topics


நீங்கள் , மேன்மை , பாராட்டுகிறது , நல்லதல்ல; , கொஞ்சம் , புளித்தமா , பிசைந்தமா , முழுவதையும் , புளிப்பாக்குமென்று , அறியீர்களா? , 1கொரிந்தியர் 5:6 , 1கொரிந்தியர் , 1கொரிந்தியர் IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் IN TAMIL , 1கொரிந்தியர் 5 TAMIL BIBLE , 1கொரிந்தியர் 5 IN TAMIL , 1கொரிந்தியர் 5 6 IN TAMIL , 1கொரிந்தியர் 5 6 IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் 5 IN ENGLISH , TAMIL BIBLE 1Corinthians 5 , TAMIL BIBLE 1Corinthians , 1Corinthians IN TAMIL BIBLE , 1Corinthians IN TAMIL , 1Corinthians 5 TAMIL BIBLE , 1Corinthians 5 IN TAMIL , 1Corinthians 5 6 IN TAMIL , 1Corinthians 5 6 IN TAMIL BIBLE . 1Corinthians 5 IN ENGLISH ,