1. இயன்றமட்டும் ஊழியத்தைச் செய்யுங்கள்
(மற்றவர் உங்களை வஞ்சித்தாலும் யாக்கோபைப் போல)
ஆதியாகமம் 31:1-7 என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனு க்கு ஊழியஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறீர்கள். உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்
2. இயன்றமட்டும் ஆலயத்திற்குக் கொடுங்கள்
(மற்றவர் கொடுக்கத் தவறினாôலும் தாவீதைப் போல)
1நாளாகமம் 29:2-3 நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று... என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்தி ருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளி யையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.
3. இயன்றமட்டும் தைலத்தை ஊற்றுங்கள்
(மற்றவர் உங்களை நிந்தித்தாலும் மரியாளைப் போல)
மாற்கு 14:1-9; யோவான் 12:3 மரியாள் இயேசுவின் பாதத்தில் தைலத்தை ஊற்றினாள்; இதைக்குறித்து முறுமுறுத்தார்கள். இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்பட்டுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள் என்றார்.
4. இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
(மற்றவர் உங்களை எதிர்த்தாலும் பவுலைப் போல)
ரோமர் 1:1-16 பவுல்: ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். கிறிஸ்துவின் சுவிசேஷத் தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
5. இயன்றமட்டும் சமாதானமாய் வாழுங்கள்
(மற்றவர் உங்களைப் பழிவாங்கினாலும் பவுலைப் போல)
ரோமர் 12:17-21; உபாகமம் 32:35 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைக்குத் தீமைச் செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமான வைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
Author: Rev. M. Arul Doss