யார் நன்றாயிருப்பார்கள்?

1. கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் 
பிரசங்கி 8:12 பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாக பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்...
சங்கீதம் 112:1; சங்கீதம் 128:1 கர்த்தருக்குப் பயந்து அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
நீதிமொழிகள் 10:27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்

2. தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுகிறவர்கள் 
யாத்திராகமம் 20:12; உபாகமம் 5:16 உன் தேவனாகிற கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயி ருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
எபேசியர் 6:2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்...
நீதிமொழிகள் 4:10 என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.

3. கட்டளையைக் கைக்கொள்ளுகிறவர்கள் 
உபாகமம் 4:40(31-40) நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும் படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய்.
உபாகமம் 5:29(6-21) அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நன்றாயிருக் கும்படி, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
உபாகமம் 6:3,18,24 நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனா கிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும் அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்ய சாவதானமாயிரு.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download