மெய்யான இயேசுகிறிஸ்து

1. மெய்யான ஒளி
யோவான் 1:9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி
1யோவான் 2:8 நான் புதிய கற்பனையும் எழுதுகிறேன், இது அவருக் குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

2. மெய்யான அப்பம்
யோவான் 6:32,55 வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்.

3. மெய்யான திராட்சச்செடி
யோவான் 15:1,2 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட் சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துபோடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

4. மெய்யான தேவன்
1யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள் வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக் கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். 
ரோமர் 9:5 பிதாக்கள் அவருடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

5. மெய்யான ஆசாரியர்
எபிரெயர் 7:21-24 இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக் கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்... இவரோ, என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிபோகாத ஆசாரியத்துவமுள்ளவராயி ருக்கிறார் 


Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download