2தீமோத்தேயு 3:16-17 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவை கள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்த்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
கொலோசெயர் 1:28 கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படி
1. இசையில் தேறின தாவீது
1சாமுவேல் 16:16,18 பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடே கூட இருக்கிறார் என்றான்.
2. வேதத்தில் தேறின எஸ்றா
எஸ்றா 7:6,11 எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
3. அறிவில் தேறின எலிகூ
யோபு 36:1-4 பின்னும் எலிகூ: மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்
4. ஞானத்தில் தேறின சாலொமோன், தானியேல்
பிரசங்கி 1:16 இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமி லிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்;
தானியேல் 1:3,6,17 இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களு மாகிய சில வாலிபர்... (தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா)
5. சட்டத்தில் தேறின பவுல்
கலாத்தியர் 1:14; அப்போஸ்தலர் 22:3 என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கிய முள்ளவனாயிருந்தேன்
Author: Rev. M. Arul Doss