தழும்புகளால் குணமாக்கும் கர்த்தர்

ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்மு டைய     அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்... அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்
1பேதுரு 2:24 அவர்     தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
அப்போஸ்தலர் 10:38 நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
எரேமியா 17:14 கர்த்தாவே, என்னை குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; 

1. நோயுற்றவர்களைக் குணமாக்குகிற கர்த்தர் 
சங்கீதம் 103:3-5 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களை எல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி...
லூக்கா 7:1-10 நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். கர்த்தர் அவனைக் குணப்படுத்தினார்.

2. நொறுங்கினவர்களைக் குணமாக்குகிற கர்த்தர் 
சங்கீதம் 147:3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்; அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
ஏசாயா 61:1; லூக்கா 4:18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நறுங்குண்டவர்களை குணமாக்க...
சங்கீதம் 34:18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
சங்கீதம் 51:17 தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்

3. நொந்தவர்களைக் குணமாக்குகிற கர்த்தர் 
மாற்கு 5:25-34 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானலுஹ் களை யெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, இயேசு அவளைக் குணமாக்கினார்.
லூக்கா 7:21 நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளை யும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி...
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download