நம் இருதங்களில் கர்த்தர் இருக்கவேண்டும்

1. நம் இருதயங்களில் கர்த்தரைப் பரிசுத்தம்பண்ணவேண்டும் 
1பேதுரு 3:15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களில் இருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத் தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
2. நம் இருதயங்களில் கிறிஸ்து வாசமாயிருக்கவேண்டும் 
எபேசியர் 3:17 விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைப்பெற்றவர்களாகி...
3. நம் இருதயங்களில் தேவஅன்பு ஊற்றப்படவேண்டும் 
ரோமர் 5:5 நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
4. நம் இருதயங்களில் ஆவி கொடுக்கப்படவேண்டும் 
கலாத்தியர் 4:6 நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா பிதாவே என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
2கொரிந்தியர் 1:22 அவர் நம்மை முத்தரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார். 
5. நம் இருதயங்களில் பிரமாணங்கள் எழுதப்படவேண்டும் 
எபிரெயர் 8:10; 10:16 என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன் 
2கொரிந்தியர் 3:2 எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷரா லும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே
6. நம் இருதயங்களில் சமாதானம் ஆளவேண்டும் 
கொலோசெயர் 3:15 தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கட வது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ள வர்களாயுமிருங்கள்
7. நம் இருதயங்களில் விடிவெள்ளி உதிக்கவேண்டும் 
2பேதுரு 1:19 அதிக உறுதியான தீர்க்கத்தரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத் தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download