சங்கீதம் 16:1-11 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுவீர்
எண்ணாகமம் 18:20 கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாயிருக்கிறேன்
சங்கீதம் 33:12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது
1. தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கிறவர்
ஆதியாகமம் 15:7 இந்த தேசத்தைச் சுதந்தரமாக கொடுக்கும்பொருட்டு, உன்னை (ஆபிரகாமை) அழைத்துவந்த கர்த்தர் நானே.
ஆதியாகமம் 17:8 நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதை யும்... நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்கு தேவனாயி...
ஆதியாகமம் 28:4; ஆதியாகமம் 48:4; லேவியராகமம் 20:24; உபாகமம் 15:5; உபாகமம் 31:3; சங்கீதம் 47:4; சங்கீதம் 135:12; சங்கீதம் 136:21
2. ராஜ்யங்களைச் சுதந்தரமாகக் கொடுக்கிறவர்
மத்தேயு 25:31-46 ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். யாக்கோபு 2:5
3. வாக்குத்தத்தங்களைச் சுதந்தரமாகக் கொடுக்கிறவர்
எபிரெயர் 6:11,17 தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
4. ஆசீர்வாதங்களைச் சுதந்தரமாகக் கொடுக்கிறவர்
1பேதுரு 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியு...
5. பிள்ளைகளைச் சுதந்தரமாகக் கொடுக்கிறவர்
சங்கீதம் 127:4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்
கலாத்தியர் 4:7 இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
Author: Rev. M. Arul Doss