1. சிலுவையைச் சுமந்தார்
யோவான் 19:17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
1பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும் படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்;
2. துக்கங்களைச் சுமந்தார்
ஏசாயா 53:4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்.
மத்தேயு 8:17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கத்தரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
3. அக்கிரமங்களைச் சுமந்தார்
ஏசாயா 53:11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தி யாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்.
4. பாவங்களைச் சுமந்தார்
ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக் காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து,
யோவான் 1:29 யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி
1யோவான் 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப் பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை
எபிரெயர் 9:28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும் படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு...
1பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும் படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்;
Author: Rev. M. Arul Doss