சங்கீதம் 119:9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால் தானே.
1. கற்புள்ள வாலிபன் (யோசேப்பைப்போல)
ஆதியாகமம் 39:1-23 கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். யோசேப்பு அவனுடைய எஜமானின் மனைவியிடம்: நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்று விலகி ஓடிப்போனான்.
2. தீரமுள்ள வாலிபன் (யோசுவாவைப்போல)
யாத்திராகமம் 33:11 நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய (மோசே) பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
யாத்திராகமம் 17:8-16 யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களை யும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். யோசுவா 6:27
3. வீரமுள்ள வாலிபன் (தாவீதைப்போல)
1சாமுவேல் 17 :1-51 சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்த னோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன்
1சாமுவேல் 18:12,14 தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் 1சாமுவேல் 16:12
4. திறமையுள்ள வாலிபன் (தானியேலைப்போல)
தானியேல் 1:1-17 தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங் களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.
தானியேல் 2:47-48 ராஜா தானியேலைப் பெரியவனாக்கி... சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.
தானியேல் 6:3,16,20,28 தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தது
5. பக்தியுள்ள வாலிபன் (தீமோத்தேயுவைப்போல)
2தீமோத்தேயு 3:14-15 நீ கற்று நிச்சயத்துக்கொண்டவைகளில் நிலைத்திரு.. கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக் கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
அப்போஸ்தலர் 16:1; 1கொரிந்தியர் 4:17; ,2தீமோத்தேயு 1:2
Author: Rev. M. Arul Doss