1. சிலுவைப்பற்றிய உபதேசம்
1கொரிந்தியர் 1:17-18 சிலுவைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
2. சிலுவையைக்குறித்து மேன்மை
கலாத்தியர் 6:14 நானோ(பவுல்) நம்முடைய இயேசுகிறிஸ்துவின் சிலுவை யைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைப் பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறை யுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறேன்
3. சிலுவையில் சிந்தின இரத்தம்
கொலோசெயர் 1:20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதா னத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
4. சிலுவையில் கொன்ற பகை
எபேசியர் 2:16(13-18) பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
5. சிலுவையில் கண்ட வெற்றி
கொலோசெயர் 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவை யிலே வெற்றிசிறந்தார்.
6. சிலுவையில் அறைந்த பழைய மனுஷன்
ரோமர் 6:6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறைப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
7. சிலுவை மரணபரியந்தம் கீழ்ப்படிதல்
பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
Author: Rev. M. Arul Doss