1. ஒரு கோல் போதும்
யாத்திராகமம் 4:17,20 (1-20) கோலை உன் கையில் பிடித்துக் கொண்டுபோ, நீ அடையாளங்களைச் செய்வாய்.
யாத்திராகமம் 4:20 யாத்திராகமம் 7:17 தண்ணீர் இரத்தமாய் மாறினது யாத்திராகமம் 8:5 தவளைகள் வந்தது; யாத்திராகமம் 8:17 பேண்கள் வந்தது; யாத்திராகமம் 9:23 கல்மழை பெய்தது; யாத்திராகமம் 10:13 வெட்டுக்கிளிகள் வந்தது;
யாத்திராகமம் 14:21 மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி னான்... ஜலம் பிளந்து பிரிந்து போயிற்று
யாத்திராகமம் 17:9 மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். (யேகோவா நிசி)
2. ஒரு சொல் போதும்
மத்தேயு 8:8 நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
மத்தேயு 9:29 ஆகக்கடவது; மாற்கு 2:11 வீட்டுக்குப்போ; மாற்கு 3:5 கையை நீட்டு; மாற்கு 4:39 இரையாதே, அமைதலாயிரு; மாற்கு 5:41 தலித்தாகூமி; மாற்கு 5:8,9 புறப்பட்டுப்போ; லூக்கா 5:13 சுத்தமாகு; லூக்கா 7:14 எழுந்திரு யோவான் 11:43 வெளியே வா
3. ஒரு கல் போதும்
1சாமுவேல் 17:40 தாவீது தன் தடியைக் கையிலே பிடித்துக் கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை தன்னுடைய அடைப்பையிலே போட்டு, பெலிஸ்தனண்டையிலே போனான்.
1சாமுவேல் 17:49 அந்த கல் அவன் நெற்றியில் பதிந்துபோனதினால் அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
1சாமுவேல் 17:50 தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்.
Author: Rev. M. Arul Doss