1. கர்த்தரைப் பின்பற்றி வர விரும்பினால்
(சிலுவையை எடுத்து பின்பற்றுங்கள்)
மத்தேயு 16:24 இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
மாற்கு 8:34; லூக்கா 9:23; மத்தேயு 10:38; மாற்கு 10:21
2. ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால்
(கற்பனையைக் கைக்கொள்ளுங்கள்)
மத்தேயு 19:17 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வா னேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்
லூக்கா 18:17; யோவான் 3:5
3. பூரண சற்குணனாயிருக்க விரும்பினால்
(உனக்குள்ளதை தரித்திரருக்குக் கொடுங்கள்)
மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பி னால், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். மத்தேயு 5:48
4. பெரியவனாயிருக்க விரும்பினால்
(பணிவிடைக்காரனாக இருங்கள்)
மத்தேயு 20:26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்
மத்தேயு 23:11; மாற்கு 10:43; மத்தேயு 18:1,4; லூக்கா 9:46,48; 22:24
5. முதன்மையானவனாயிருக்க விரும்பினால்
(ஊழியக்காரனாக இருங்கள்)
மத்தேயு 20:27 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
மாற்கு 9:35; மாற்கு 10:44; லூக்கா 14:7-8
Author: Rev. M. Arul Doss .