லூக்கா 16:13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைப் பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
1. பார்வைக்கு ஊழியஞ்செய்யாதிருங்கள்
எபேசியர் 6:6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். மனுஷ ருக்கென்று ஊழியஞ்செய்யாமல் கர்த்தருக்கென்றே நல்மனதோடே செய்யுங்கள்.
கொலோசெயர் 3:22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான் களாயிருக்கிறவர்களுக்கு எல்லா காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்
2. பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதிருங்கள்
ரோமர் 6:6,23(1-23) நாம் இனி பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக் கிறோம். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
3. பிழைப்புக்கு (வயிற்றுக்கு) ஊழியஞ்செய்யாதிருங்கள்
ரோமர் 16:17-18 சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிற வர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலக வேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். அப்படிப் பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ் செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில் லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
Author: Rev. M. Arul Doss