ஏசாயா 40:29-31 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன்கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
(அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்த வரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்)
1. ஜெபம் செய்வதில் சோர்ந்துபோகாதிருங்கள்.
லூக்கா 18:1(1-18) சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்...
மாற்கு 14:38; லூக்கா 22:46 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்
அப்போஸ்தலர் 6:4 ஜெபம்பண்ணுவதில் இடைவிடாமல் தரித்திரு
கொலோசெயர் 4:2; 1தெசலோனிக்கேயர் 5:17 இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்; ஜெபத்தில் விழித்திருங்கள்.
2. நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதிருங்கள்.
2தெசலோனிக்கேயர் 3:13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்
கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்...
சங்கீதம் 34:14; சங்கீதம் 37:27 தீமையை விட்டு, நன்மைசெய்...
நீதிமொழிகள் 3:27; யாக்கோபு 4:17 நன்மைசெய்யும்படி உனக்குத் திரானியிருக்கும்போது, செய்யாமல் இருக்காதே அது பாவம்.
லூக்கா 6:35 அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே
3. நற்கிரியைச் செய்வதில் சோர்ந்துபோகாதிருங்கள்.
ரோமர் 2:7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனையும் அளிப்பார்
அப்போஸ்தலர் 9:36 தபித்தாள் நற்கிரியைகளைச் செய்துவந்தாள்.
2தீமோத்தேயு 3:16 தேவனுடைய மனுஷன் எந்த நற்கிரியையும் செய்ய தகுதியுள்ளவனாகும்படி வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது
தீத்து 2:14 நற்கிரியைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, தம்மைதாமே ஒப்புக்கொடுத்தார்.
Author: Rev. M. Arul Doss
நம்மால் அழுகையையோ கதறலையோ நிறுத்த முடியாத நேரங்கள் உண்டு. சில சமயங்களில், தயக்கமும், பெருமூச்சலும் இதில் அடங்கும். இத்தகைய தருணங்கள் நம்மை விரக்திக்கும் மனச்சோர்வுக்கும் கூட அழைத்துச் செல்லும். உணர்வு சோர்வு, மன அழுத்தம் மற்றும் ஆவிக்குரிய சோர்வு ஆகியவை நம்மை மூழ்கடிக்கக்கூடும்.
1) தேவ சமூகம்:
இப்படிப்பட்ட தருணங்களில் நாம் தேவனிடம் திரும்புவது தான் மிக முக்கியம். வேதாகமத்தில் கூட தாவீதீன் ஆட்களே அவன் மீது கல்லெறிய நேருகையில் அந்த விரக்தியில் மூழ்காதபடி கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான் (1 சாமுவேல் 30:6). "எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து" (2 இராஜாக்கள் 19:14) வைத்தான். ஆண்டவரின் நற்குணம், மகத்துவம், வல்லமை, அதிகாரம், அன்பு மற்றும் கிருபை ஆகியவற்றில் விசுவாசம் வைக்கும் போது, விரக்தியிலிருந்து விடுப்பட்டு அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக நம்மை அழைத்துச் செல்கிறது.
2) ஜெபம் சமாதானத்தைத் தரும்:
விசுவாசிகள் தங்கள் சுமைகள், பாரங்கள், கவலைகள், மனக்குறைகள் மற்றும் கஷ்டங்கள் என எதுவாக இருந்தாலும் தேவனிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி செய்யும் போது பிலிப்பியர் 4:7ல் கூறப்பட்டதுபோல, "அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்". இந்த சமாதானத்தை அன்னாள் அனுபவித்தாள், ஆம் தேவனிடத்தில் தன் கவலையெல்லாம் அழுது தீர்த்த பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை (1 சாமுவேல் 1:18).
3) இடைவிடாத ஜெபங்கள்:
பல நேரங்களில் விசுவாசிகள் ஜெபங்களில் நிலைத்து இருப்பதில்லை, சில சமயங்களில் ஜெபிப்பதையே மறந்துவிடுவார்கள். கர்த்தராகிய இயேசு சோர்ந்துபோகாமல் ஜெபிப்பதைப் பற்றிய உவமைகளைப் பகிர்ந்து கொண்டார். முதலாவதாக, அநீதியான நீதிபதியிடம் நீதி கோரிய விடாப்பிடியான விதவை. நாளுக்கு நாள், அவள் தனது கோரிக்கையால் நீதிபதியை சோர்வடையச் செய்தாள். கடைசியில் அந்த பொல்லாத நீதிபதி நியாயம் செய்ய அவள் பக்கம் திரும்பினான், அது நியாயம் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல; அந்த விதவையின் இடைவிடாத தொல்லையின் காரணமாக அல்லவா. ஒரு பொல்லாத நீதிபதியே நீதி வழங்க முடியும் என்றால், ஏன் நீதியுள்ள தேவன் நீதி வழங்க முடியாது? இருப்பினும், மக்கள் விசுவாசத்தைப் பற்றிக் கொள்வார்களா என்று கர்த்தர் ஐயத்தோடு வினவினார் (லூக்கா 18:1-8). இரண்டாவதாக, நள்ளிரவில் விருந்தினான தன் சிநேகிதனுக்காக தொடர்ந்து மன்றாடிய நண்பன் (லூக்கா 11:5-13). ஆம், வெட்கப்படாமல், நம்பிக்கையுடன் துணிச்சலுடன், அந்த நண்பன் தனக்குத் தேவையானதை, வருந்திக் கேட்டு அவன் கேட்டதைக் காட்டிலும் மிக அதிகமாகப் பெற்றான்.
4) வாக்குத்தத்தங்கள்:
தேவ வாக்குத்தத்தங்கள் பொருத்தமானவை, எல்லா காலங்களுக்கும் ஏற்றவை மற்றும் நன்மையானது. நம்முடைய ஜெபங்களுக்கு செவிசாய்க்கும் தேவன், நம்முடைய அன்பின் பிராயசத்துக்கு வெகுமதி அளிக்கிறார். "நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலன் உண்டென்று; கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்" (எரேமியா 31:16).
வாக்குத்தத்தை இறுகப் பற்றிக் கொண்டு விசுவாசிக்கும்போது சமாதானமும் ஜெயமும் கிடைக்கின்றது.
நான் விசுவாசத்தில் உறுதியுடன் கூடிய நிலைப்பாட்டில் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran