1. யாக்கோபின் பிறப்பும் இறப்பும்
பிறப்பு: 1ஆம் நூற்றாண்டு, பெத்சாயிதா, கலிலேயா
இறப்பு: 44 கி:பி யூதேயா
செபுதேயுவின் மகன் யாக்கோபு என்பவர் இயேசுகிறிஸ்துவின் பன்னிரு சீடர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் சீடர் புனித யோவானின் சகோதரர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடம் இருந்து இவரைப் பிரித்துக்காட்ட இவர் பெரிய யாக்கோபு என்றும் அழைக்கப்படுகிறார்.
அப்போஸ்தலர் 12:1-2 அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலை செய்தான். (சீடர்களில் முதல் இரத்த சாட்சி)
2. யாக்கோபின் பிழைப்பும் அழைப்பும்
மாற்கு 1:16-20; மத்தேயு 4:21 இயேசு அவ்விடம் விட்டு போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானையும் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
லூக்கா 9:51-56 சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால் அவர் களை அழிக்கச் சொன்னவர்; ஆனால் மனுஷகுமாரன் அழிக்க அல்ல, இரட்சிக்கவே வந்தார் என்பதினைச் இயேசு இவருக்குச் சுட்டிக்காட்டினார்.
3. யாக்கோபின் பெயரும் புகழும்
மாற்கு 3:17 செபுதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்.
மாற்கு 9:2 இயேசுவின் தோற்றம் மாறியதை கண்ட மூன்று அப்போஸ்தலர்களில் இவரும் ஒருவராவார்.
4. யாக்கோபின் கோருதலும் மாறுதலும்
மத்தேயு 20:20 செபுதேயுவின் குமாரருடைய தாயும் விண்ணப்பண்ணுதல்
மாற்கு 10:35-41 செபுதேயுவின் குமாரனாகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, எங்களில் ஒருவன் உமது வலதுபாரிசத் திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்றார்கள்
Author: Rev. M. Arul Doss