ரோமர் 12:21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மை யினாலே வெல்லு.
மத்தேயு 5:37,39 தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்.
2தீமோத்தேயு 2:24; 1தெசலோனிக்கேயர் 3:3; 1சாமுவேல் 24:17; ஆதியாகமம் 50:20; ஆபகூக் 1:13
1. தீமையை விலக்கிடுங்கள்
சங்கீதம் 37:27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென் றைக்கும் நிலைத்திருப்பாய் சங்கீதம் 34:14; நீதிமொழிகள் 3:7; நீதிமொழிகள் 4:27; நீதிமொழிகள் 16;6,17
2. தீமையை வெறுத்திடுங்கள்
ரோமர் 12:9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
சங்கீதம் 97:10; நீதிமொழிகள் 8:13; ஆமோஸ் 5:15
3. தீமையைச் செய்யாதிருங்கள்
1தெசலோனிக்கேயர் 5:15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக் குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
நீதிமொழிகள் 17:13; 31:12; சங்கீதம் 34:16; ஏசாயா 14:20; 1பேதுரு 3:12
4. தீமையைப் பின்பற்றாதிருங்கள்
3யோவான் 1:11 பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை
5. தீமையைத் தேடாதிருங்கள்
நீதிமொழிகள் 11:27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். ஆமோஸ் 5:14
Author: Rev. M. Arul Doss