யோவான் 8:12; 9:5; 12:46 நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்
யோவான் 1:9 மெய்யான ஒளி; லூக்கா 2:30 பிரகாசிக்கிற ஒளி; 1பேதுரு 2:9 ஆச்சரியமான ஒளி; 2கொரிந்தியர் 4:6 அறிவாகிய ஒளி; ஏசாயா 10:17 இஸ்ரவேலின் ஒளி
1. பிரகாசிக்கிற ஒளி
லூக்கா 2:30(25-33) (சிமியோன்)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி யாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணி யத்தை என் கண்கள் கண்டது. அப்போஸ்தலர் 13:47
யோவான் 1:5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை
1யோவான் 1:5,7; 2:8;மத்தேயு 17:2; வெளிப். 1:16; 2கொரிந்தியர் 4:6
2. பிரகாசிப்பிக்கிற ஒளி
யோவான் 1:9 (1-9) உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப் பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
சங்கீதம் 118:27 கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்.
யோபு 33:28-30 தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்...
அப்போஸ்தலர் 9:3 வானத்திலிருந்து வந்த ஒளி பவுலைப் பிரகாசித்தது
3. பிரதிபலிக்கிற ஒளி
ஏசாயா 9:2 இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைச் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
மத்தேயு 5:14-16 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.
யாத்திராகமம் 34:29-35 சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு மோசே இறங்கும்போது அவன் முகம் பிரகாசித்திருப் பதை அறியாதிருந்தான்.
சங்கீதம் 4:6 கர்த்தாவே உமது முகத்தின் ஒளியை பிரகாசிக்கப்...
ஏசாயா 60:1-3 எழும்பி பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது... உன்மேல் கர்த்தர் உதிப்பார்
Author: Rev. M. Arul Doss