1பேதுரு 1:15-16 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்
லேவியராகமம் 19:1-4 உங்கள் தேவனும் கர்த்தருமாயிருக்கிற நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
எபிரெயர் 12:14 பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை
1. உடலில் பரிசுத்தராயிருங்கள் (கண், காது, கரம், கால், வாய்)
ரோமர் 12:1 நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனு டைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்;
1தெசலோனிக்கேயர் 4:1-7 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டு மென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது 1தெசலோனிக்கேயர் 4:5-7
2. உள்ளத்தில் பரிசுத்தராயிருங்கள் (சிந்தை, எண்ணம், மனம், இதயம்)
யாக்கோபு 4:8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத் தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
1பேதுரு 3:15 உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்.
3. உணர்வில் பரிசுத்தராயிருங்கள் (பாசம், நேசம், சிநேகம், காதல்)
எபேசியர் 1:1-8 தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லா தவர்களாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே...நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்...
4. உறவில் பரிசுத்தராயிருங்கள் (சொந்தம், பந்தம், நட்பு)
1தெசலோனிக்கேயர் 5:23-26 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்ற மற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. சகோதரர் எல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
5. உடையில் பரிசுத்தராயிருங்கள் (அங்கி, ஆடை, வஸ்திரம்)
யாத்திராகமம் 40:1-16ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக யாத்திராகமம் 28:1-8
Author: Rev. M. Arul Doss