1. அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்மேல் கைவைக்காதீர்
1சாமுவேல் 24:6-7(1-22) கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன் மேல் என் கையை போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி, தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களை தடைப்பண்ணினான். (அருள்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைக்கக்கூடாது) 1சாமுவேல் 26:9,11,16,23
2. அபிஷேகம்பண்ணப்பட்டவர்களைக் கொல்லாதீர்
1சாமுவேல் 1:4 (1-16) தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷே கம்பண்ணினவரைக் கொன்றுபோடும்படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற்போனது என்ன?... (அருள்பொழிவு செய்யப் பட்டவரை கையோங்கி கொலைசெய்ய அஞ்சாதது ஏன்?)
3. அபிஷேகம்பண்ணப்பட்டவர்களைத் தொடாதீர்
1நாளாகமம் 16:22; சங்கீதம் 105:15 நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கத்தரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். (அருள்பொழிவு செய்தாரை தொடாதீர்; தீங்கிழைக்காதீர்.)
4. அபிஷேகம்பண்ணப்பட்டவர்களை எதிர்க்காதீர்
அப்போஸ்தலர் 4:28; சங்கீதம 2:2 நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். (அருள்பொழிவு பெற்ற உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக திரண்டனர்)
5. அபிஷேகம்பண்ணப்பட்டவர்களைத் தூற்றாதீர்
சங்கீதம் 89:46,50 எதுவரைக்கும் கர்த்தாவே நீர் என்றைக்கும் மறைந் திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? ஆண்ட வரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்... நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும் (அருள்பொழிவு பெற்றவரைச் சென்ற இடமெல்லாம் தூற்றுகின்றனர்)
Author: Rev. M. Arul Doss