ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானபிரபு என்னப்படும்.
1. அதிசயமானவர் (வியப்புக்குரியவர்)
நியாயாதிபதிகள் 13:18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம்
சங்கீதம் 72:18; சங்கீதம் 77:14; சங்கீதம் 86:10; சங்கீதம் 136:14; ஏசாயா 25:1; மீகா 7:15; யோபு 5:9; யோபு 9:10
2. ஆலோசனைக் கர்த்தா (ஆலோசகர்)
ஏசாயா 28:29 அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்
சங்கீதம் 16:7; சங்கீதம் 32:8; சங்கீதம் 139:17; சங்கீதம் 16:7; நீதிமொழிகள் 15:22; நீதிமொழிகள் 20:18; நீதிமொழிகள் 24:6
3. வல்லமையுள்ள தேவன் (வலிமைமிகு இறைவன்)
செப்பனியா 3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்.
யோபு 42:2; எரேமியா 50:34; வெளிப். 1:8; வெளிப். 4:8; வெளிப். 11:7
4. நித்திய பிதா (என்றுமுள தந்தை)
1தீமோத்தேயு 1:17 நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு... 1தீமோத்தேயு 6:15; 1யோவான் 1:2
5. சமாதான பிரபு (அமைதியின் அரசன்)
எபேசியர் 2:14(13-18) அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி... சமாதானத்தைச் சுவிசேஷமாய் அறிவித்தார்.
மீகா 5:4,5; ரோமர் 15:33; 16:20; 1கொரிந்தியர் 14:33; பிலிப்பியர் 4:9; 1தெசலோனிக்கேயர் 5:23; 2தெசலோனிக்கேயர் 3:16
Author: Rev. M. Arul Doss