1யோவான் 2:1 ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
1. அழிக்காதபடிக்கு பரிந்துபேசிய ஆபிரகாம்
ஆதியாகமம் 18:17-33 அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
2. தீங்குசெய்யாதபடிக்கு பரிந்துபேசிய மோசே
யாத்திராகமம் 32 :1-14 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்... மோசே கர்த்தரை நோக்கி: உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும் என்று கெஞ்சி பிரார்த்தித்தான்
3. குணமாக்கும்படிக்கு பரிந்துபேசிய மோசே
எண்ணாகமம் 12:1-16 மிரியாமும் ஆரோனும்: மோசேக்கு விரோதமாக பேசினார்கள்; கர்த்தர் அதைக் கேட்டார். மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
4. இரட்சிக்கும்படிக்கு பரிந்துபேசிய சாமுவேல்
1சாமுவேல் 7:1-9 எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள் ளும் என்றார்கள் இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கிக் வேண்டிக்...
5. விடுவிக்கும்படிக்கு பரிந்துபேசிய யோபு
யோபு 42:1-10 யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்.
6. மன்னிக்கும்படிக்கு பரிந்துபேசிய இயேசு
லூக்கா 23:34 இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்ன தென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
7. சுமத்தாதபடிக்கு பரிந்துபேசிய ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:55-60 ஸ்தேவானோ, முழங்காற்படியிட்டு: ஆண்ட வரே, இவர்கள் மேல் இந்த பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
Author: Rev. M. Arul Doss