சபிக்கப்பட்டவர்கள் யார்?

1. கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள்
எரேமியா 17:5 மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உபாகமம் 29:18-20 கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும்... உங்களில் இராதபடி பாருங்கள்.

2. கர்த்தருடைய வார்த்தையை கேளாதவர்கள்
எரேமியா 11:4 நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய(சூளை) எகிப்து தேசத்தில் இருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறா ரென்று அவர்களுக்குச் சொல்லு
கலாத்தியர் 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப் பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திரா தவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே

3. கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவர்கள்
எரேமியா 48:10 கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக் கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.

4. கர்த்தருக்குக் கெட்டுப்போனதை பலியிடுகிறவர்கள்
மல்கியா 1:14 தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்

5. கர்த்தரிடத்தில் அன்பு கூராதவர்கள்
1கொரிந்தியர் 16:22 ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download