ஊழியக்காரரை நேசிக்கும் கர்த்தர்

சங்கீதம் 35:27 ஊழிக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக என்று எப்போதும் சொல்வார்களாக.

1. ஊழியக்காரர்மேல் பரிதாப்படுகிறவர் 
உபாகமம் 32:36 (35-43) கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். 
சங்கீதம் 135:14 கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயம் விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்

2. ஊழியக்காரரை அக்கினி ஜøவாலையாக மாற்றுகிறவர் 
சங்கீதம் 104:1-4; எபிரெயர் 1:7 தம்முடைய தூதர்களைக் காற்று  களாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜøவாலைகளாகவும் செய்கிறார்.(மாற்றுகிறார்) 

3. ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பிகிறவர் 
ஏசாயா 65:15 (13-25) நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்

4. ஊழியக்காரருக்கு இரகசியத்தை வெளிப்படுத்துகிறவர் 
ஆமோஸ் 3:7 கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கத்தரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத் தையும் செய்யார் (செய்யமாட்டார்)

5. ஊழியக்காரருக்கு சம்பவிப்பதைக் காண்பிக்கிறவர் 
வெளிப். 1:1 சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு...யோவானுக்கு வெளிப்...
வெளிப். 22:6(1-14) பின்பு அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள், சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டிய வைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கத்தரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download