1. கிரியைகளை உறுதிப்படுத்துகிறவர்
சங்கீதம் 90:17(1-17) எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்
2. நடைகளை உறுதிப்படுத்துகிறவர்
நீதிமொழிகள் 16:9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். சங்கீதம் 37:23; நீதிமொழிகள் 20:24
3. அடிகளை உறுதிப்படுத்துகிறவர்
சங்கீதம் 40:2-3 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயில் கொடுத்தார்.
4. எண்ணங்களை உறுதிப்படுத்துகிறவர்
நீதிமொழிகள் 15:22 ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
5. யோசனைகளை உறுதிப்படுத்துகிறவர்
நீதிமொழிகள் 16:3(1-3) உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
6. வசனங்களை உறுதிப்படுத்துகிறவர்
மாற்கு 16:20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப் படுத்தினார். 1கொரிந்தியர் 2:5; சங்கீதம் 119:38
7. சிங்காசனத்தை உறுதிப்படுத்துகிறவர்
நீதிமொழிகள் 16:12 அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
சங்கீதம் 93:2; புலம்பல் 5:19
Author: Rev. M. Arul Doss