1. கனிகளே இல்லை
லூக்கா 13:6-9 ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான். அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றும் காணவில்லை. மூன்று வருஷமாய் கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை,இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது
மத்தேயு 21:19(17-21) வழியருகே அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.
மத்தேயு 3:10; 7:19; லூக்கா 3:9; யோவான் 15:2 இப்பொழுதே கோடரி யானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்
உபாகமம் 20:20 கனிகொடாத மரங்களை வெட்டியழித்து...
2. கசப்பாக கனிகள்
ஏசாயா 5:1-6என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத் தோட்டம் உண்டு. அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்தி ருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.
எரேமியா 2:21 நான் உன்னை முற்றிலும் நற்கனி தரும் உயர் குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிபோனதென்ன?
மத்தேயு 7:16-20; 12:33 நல்லமரம் கெட்டக்கனிகளைக் கொடுக்கமாட்டாது
3. மிகுந்த கனிகள்
யோவான் 15:1-8 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். நீங்கள் மிகுந்த கனிகள் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்
எரேமியா 17:7-8 கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பவன்... மழை தாழ்ச்சியான வருஷத்திலும் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
சங்கீதம் 92:15 முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பர்கள்
நீதிமொழிகள் 12:12 நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
ஏசாயா 37:31; 2 இராஜாக்கள் 19:30 யூதா வம்சத்தார் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
Author: Rev. M. Arul Doss