யோவான் 19:28 எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக “தாகமாயிருக்கிறேன் என்றார்”.
1. தாகமாய் இருந்தவர்
மத்தேயு 27:48; மாற்கு 15:36 கடற்காளானை எடுத்து, காடியிலே தோய்த்து அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
சங்கீதம் 69:21 என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
யோவான் 4:8,14 தாகத்துக்குத்தா என்று சமாரியா பெண்ணிடம் கேட்கிறார். இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது.
2. தாகத்தைத் தீர்க்கிறவர்
யோவான் 7:37-38 ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
வெளிப். 21:6 நான் அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் தாகமாயிருக்கிறவனுக்கு ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
வெளிப். 22:17 தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்
3. தாகம் தீர்க்க சொன்னவர்
நீதிமொழிகள் 25:21 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு
ரோமர் 12:20 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு
மத்தேயு 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்.
தாகமாயிருங்கள்
சங்கீதம் 42:1-2 மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல... என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாயிருக்கிறது
சங்கீதம் 63:1; சங்கீதம் 143:6 ஆத்துமத்தில் தாகமாயிருங்கள்
Author: Rev. M. Arul Doss