வேண்டிக்கொள்ளுங்கள்

1. நீங்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்
யாத்திராகமம் 8:8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப் பித்து: அந்தத் தவளைகள் (வாதைகள்) என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

2. இரட்சிக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்
1சாமுவேல் 7:8 சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

3. அழிந்துபோகாதபடி வேண்டிக்கொள்ளுங்கள்
யோனா 1:6 அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ (யோனா)  நித்திரைப்பண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

4. சம்பவியாதபடி வேண்டிக்கொள்ளுங்கள்
மத்தேயு 24:20-21 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளி லாவது, சம்பவியாதபடி வேண்டிக்கொள்ளுங்கள். 

5. நேரிடாதபடி வேண்டிக்கொள்ளுங்கள்
அப்போஸ்தலர் 8:24(9-24) அதற்குச் சீமோன் (மாயவித்தைக்காரன்): நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

6. திறந்தருளும்படி வேண்டிக்கொள்ளுங்கள்
கொலேசெயர் 4:4-5 திருவசனம் சொல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். 

7. விடுவிக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்
2தெசலோனிக்கேயர் 3:2(1-12) துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலும் இல்லையே

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download