ஏசாயா 9:6 அவர் சமாதான பிரபு...
1. சமாதானத்தின் தேவன்
1கொரிந்தியர் 14:33 தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதா னத்திற்குத் தேவனாயிருக்கிறார்
ரோமர் 16:20 சமாதானத்தின் தேவன் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.
1தெசலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக
2தெசலோனிக்கேயர் 3:16 சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக.
2. சமாதான காரணர்
எபேசியர் 2:14(13-18) அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து... சமாதானத்தைச் சுவிசேஷமாய் அறிவித்தார்.
மீகா 5:4,5 இவரே சமாதான காரணர்
2கொரிந்தியர் 13:11 அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
ரோமர் 5:1 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
3. சமாதானத்தை அருளுகிறவர்
ஏசாயா 53:5 நமக்கு சமாதானம் உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
சங்கீதம் 29:11 கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்
சகரியா 9:10 அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி தொடங்கி பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்.
லூக்கா 24:36; யோவான் 20:19 சீடர்களின் நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துபோகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.
Author: Rev. M. Arul Doss