1. பிரியமாய் நடந்துகொள்ளுங்கள்
1சாமுவேல் 2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
2. தயையும் நற்புத்தியும் பெறுங்கள்
நீதிமொழிகள் 3:1,4 என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது... அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
3. கிருபையிலும் தயவிலும் வளருங்கள்
லூக்கா 2:52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிரு பையிலும், மனுஷர் தயவிலும் அதிகதிகமாய் விருத்தியடைந்தார்.
ஆதியாகமம் 39:21,23 கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணின படியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
4. குற்றமற்றவனாயிருக்க பிரயாசப்படுங்கள்
அப்போஸ்தலர் 24:15-16 (10-16) நீதிமான்களும் அநீதிமான்களும் மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனி டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை கொண்டிருக் கிறேன். இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
5. யோக்கியமானதைச் செய்ய நாடுங்கள்
2கொரிந்தியர் 8:20-21 (1-21) உங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப் படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து, கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்
Author: Rev. M. Arul Doss