மரிக்கும் வரை மறக்காதீர்

1. கர்த்தரை மறக்காதீர்
உபாகமம் 6:12 நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
உபாகமம் 8:11 கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு 
சங்கீதம் 9:17 தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
ஏசாயா 51:12 பூமியை அஸ்திபாரப்படுத்தி உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கு நீ யார்?

2. கட்டளையை மறக்காதீர்
உபாகமம் 4:10 உன் கண் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும்... உன் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
சங்கீதம் 119:93 நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.

3. வேதத்தை மறக்காதீர்
சங்கீதம் 119:61 துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை

4. போதகத்தை மறக்காதீர்
நீதிமொழிகள் 3:1 என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

5. உபகாரங்களை மறக்காதீர்
சங்கீதம் 103:2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு உள்ளமே... அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

6. உபசரிக்க மறக்காதீர்
எபிரெயர் 13:2 அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

7. நன்மைசெய்ய மறக்காதீர்
எபிரெயர் 13:16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download