1. சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்
லூக்கா 6:28(27-37)உங்களைக் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
மத்தேயு 5:44 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிற வர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
சங்கீதம் 62:4 தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள்.
2. துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்
ரோமர் 12:14(9-21)உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங் கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்
மத்தேயு 5:11-12 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய் சொல்வார் களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
1கொரிந்தியர் 4:12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகி றோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு சகிக்கிறோம்.
சங்கீதம் 31:15 என் காலங்கள் உமது கரத்தில் இருக்கிறது; என் சத்துருக் களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
3. தீமை செய்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்
1பேதுரு 3:9 (8-17) தீமைக்குத் தீமையையும், உதாசனத்தையும் சரிகட் டாமல், அதற்குப் பதிலாக... ஆசீர்வதியுங்கள்;
நீதிமொழிகள் 20:22 தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
மத்தேயு 5:39 தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்
ரோமர் 12:9 தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
ரோமர் 12:17 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்
ரோமர் 12:21 தீமையை நன்மையினால் வெல்லு.
1தெசலோனிக்கேயர் 5:15 தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்
Author: Rev. M. Arul Doss