1. உற்சாகமாய் சேவியுங்கள்
1நாளாகமம் 28:9 என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்.
யோசுவா 24:14; 1சாமுவேல் 12:20; சங்கீதம் 2:11
2. உற்சாகமாய் செய்யுங்கள்
நீதிமொழிகள் 31:13 ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளி னால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
ரோமர் 12:8 இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
1பேதுரு 5:2,3 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாய் அல்ல... உற்சாக மனதோடும் கண்காணிப்பு செய்யுங்கள்.
3. உற்சாகமாய் செலுத்துங்கள்
உபாகமம் 23:23 உன் வாயினால் சொன்னதை நிறைவேற்ற வேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.
எஸ்றா 8:28 கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்த பொன்னும் பரிசுத்தமானவைகள்.
4. உற்சாகமாய் கொடுங்கள்
யாத்திராகமம் 25:2 இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டு வரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
1நாளாகமம் 29:9; எஸ்றா 1:6; எஸ்றா 2:68; 2கொரிந்தியர் 9:7
5. உற்சாகமாய் கைக்கொள்ளுங்கள்
2நாளாகமம் 31:4 (எசேக்கியா) ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமானத்தை உற்சாகமாய் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேம் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
Author: Rev. M. Arul Doss