சங்கீதம் 21- விளக்கவுரை

முக்கியக் கருத்து :

 - யுத்தத்திலிருந்து வெற்றியோடு திரும்பும்போது பாடும் பாடல்
 - வெற்றியினால் தாவீதுக்கு கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதம்
 - தாவீதின் சத்துருக்களுக்கு கிடைத்த ஆக்கினை

1. தாவீது ராஜாவுக்கு கர்த்தர் கொடுத்த வெற்றியினிமித்தம் மகிழ்ந்து களிகூறுகிறான். தனக்கு யுத்தத்தில் வெற்றி கிடைத்தது யேகோவா தேவனுடைய வல்லமையினால்தான் என்றும் அறிக்கையிடுகிறான்.

"கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்' (வச.1).

தாவீது தேவனிடம் விண்ணப்பித்ததினால் தேவன் அவனுடைய மனவிருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் (வச.2).

(சேலா) இந்த சத்தியத்தை சற்று தரித்திருந்து தியானிக்கவேண்டும்.

பிதாவாகிய தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு சத்துருக்களின்மேல் ஜெயம் கொடுத்தார். கிறிஸ்து பிதாவினால் அபிஷேகம் பண்ணப்பட்ட இராஜா.

தேசாதிபதியாகிய பிலாத்து, "நீ யூதருடைய இராஜாவா' என்று கேட்டதற்கு ,இரட்சகர்,
 "நீர் சொல்லுகிறபடிதான்' என்று பதிலளித்தார் என்று மத்தேயு 27:11 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். 
சிலுவையிலும் அவர் இராஜாவாகத்தான் அறிவிக்கப்பட்டார்.
"யூதருடைய ராஜாவாகிய இயேசு' என்று எழுதி அவர் சிரசுக்கு மேல் வைத்தார்கள் (மத்.27:37).

"துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் ... சிலுவையிலே வெற்றிசிறந்தார்' (கொலோ.2:15).

இரட்சகரின் வெற்றி நம்முடைய வெற்றி. நமக்கு ஓர் யுத்த முண்டு.

"மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும்,அதிகாரங்களோடும் ...பொல்லாத 
ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு'
(எபேசியர் 6:12).

"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்' (1 கொரி. 15:57). இந்த ஜெயத்திற்கு தாவீது யேகோவா தேவனிடம் விண்ணப்பம் செய்தான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பிதாவினிடம் ஜெபம் செய்தார். நாமும்கூட ஜெபித்தே வெற்றியை பெறவேண்டும்.

"எந்த சமயத்திலும் ... ஆவியினாலே ஜெபம்பண்ணி ... விழித்துக்கொண்டிருங்கள்' (எபேசியர் 6:8).

2. தாவீது இராஜாவுக்கு தேவன் இந்த வெற்றியின் மூலம் பல ஆசீர்வாதங்களைத் தந்தார் (வச.3).

தாவீதின் குமாரன் என்றழைக்கப்படும் மேசியா கிறிஸ்துவுக்கும் தேவன் இந்த ஆசீர்வாதங்கçáக் கொடுத்திருக்கிறார்.

.பொற்கிரீடம் (வச.3)  வெளி.19:12
.தீர்க்காயுசு    (வச.4)  வெளி.1:18
.மகிமை       (வச.5)  எபி.2:9
.மகிழ்ச்சி      (வச.6)  யூதா 24

இந்த ஆசீர்வாதங்கள் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட ஜெயங்கொண்ட விசுவாச வீரர்கள் அனைவருக்கும் கர்த்தர் அருளுகிறார் என்று வேத வசனங்கள் நமக்கு அறிவிக்கிறது.

வச.1,6  -  மகிழ்ச்சி                          -ஏசாயா 35:10
வச. 2   -  மனவிருப்பம்                   -வெளி 21:7 வெளி.4
வச.3    -  பொற்கிரீடம்                    -2 தீமோ.4:8
வச.4    -  நீடித்த வாழ்வு                  -வெளி.21:3
வச.5    -  மேன்னை, மகத்துவம்   -வெளி.22
வச.6    -  நித்திய ஆசீர்வாதம்       -எபேசியர் 1:3
வச.7    - அசைக்கப்படாத              -மத்தேயு 7:24,25.,  -எபிரேயர் 12:28
                    வாழ்வு      
 
3. ராஜாவாகிய தாவீதின் சத்துருக்களெல்லாரையும் யேகோவா தேவன் அவனுக்குக் கீழ்படுத்தி சங்கரித் தார் "உன் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினேன்' 1 நாளா.17:10 
என்று தேவன் நாத்தான் தீர்க்கதரிசியின் மூலம் தாவீதுக்கு சொன்னார்.
மேசியா கிறிஸ்துவை எதிர்க்கிறவர்களும், தேவ ஜனமாகிய விசுவாசிகளைப் பகைக்கிறவர்களும் அவ்விதமாகவே சங்கரிக்கப்பட்டு ஆக்கினைத் தீர்ப்படைவார்கள் என்று பல வசனங்களில் இந்த சங்கீதத்தில் வாசிக்கிறோம்.

வச.8     தேவனுடைய கரத்தில் பிடிபடுவார்கள்                       வெளி.19:20
வச.9     தேவ கோபத்திற்கு ஆளாவார்கள்                                  வெளி.6:16
வச.9     அக்கினியால் பட்சிக்கப்படுவார்கள்                              வெளி.20:14-15.,    வெளி.21:8
வச.10    பூமியில் இராமல் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்  வெளி.21:1
வச.11   அவர்களுக்கு ஒன்றும் வாய்க்காது                                ஏசாயா 54:17
வச.12   தேவ அம்புகள், பட்டயம் அவர்களைத் தாக்கும்        வெளி.19:15,21.,மல்கியா 4:1,2.

Author: Rev. Dr. R. Samuel



Topics: Women Bible Study Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download