வெளிப்படுத்தின விசேஷம் 19:15-21

19:15 புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
19:16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
19:17 பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
19:18 நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
19:19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
19:20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
19:21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.




Related Topics


புறஜாதிகளை , வெட்டும்படிக்கு , அவருடைய , வாயிலிருந்து , கூர்மையான , பட்டயம் , புறப்படுகிறது; , இருப்புக்கோலால் , அவர்களை , அரசாளுவார்; , அவர் , சர்வவல்லமையுள்ள , தேவனுடைய , உக்கிரகோபமாகிய , மதுவுள்ள , ஆலையை , மிதிக்கிறார் , வெளிப்படுத்தின விசேஷம் 19:15 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 19 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 15 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 15 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 19 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 19 TAMIL BIBLE , Revelation 19 IN TAMIL , Revelation 19 15 IN TAMIL , Revelation 19 15 IN TAMIL BIBLE . Revelation 19 IN ENGLISH ,