முக்கியக் கருத்து
- கர்த்தருக்குள்ளான சகோதரர்களின் ஐக்கியம்
* நன்மையை தருகிறது.
* மகிழ்ச்சியைத் தருகிறது.
* தேவ ஆசீர்வாதத்தையும் அருளுகிறது.
1. வச.1 - தேவ மக்களாகிய சகோதரர்களுடைய ஐக்கியம் பல நன்மைகளையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. இந்த ஐக்கியம் சுயநலம் பாராமல் பிறர் நலம் கருதும் தெய்வீக அன்பை பரிமாறிக் கொள்வதால் தேவனிடம் அருகாமையையும்,
பரிசுத்தத்திலும் வளர உதவும். ஆண்டவராகிய இயேசுவும் யோவான் 17 ஆம் அதிகாரத்தில் தமது சீடர்கள் இப்படிப்பட்ட ஒருமைப்பாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என ஜெபித்தார். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள், புத்திமதிகள் மூலம் பக்தி விருத்தியும் வாழ்க்கையில் உயர்வும் உண்டாவதை, நடைமுறையில் நாம் பார்க்கிறோம். ஆனால் சுயநலமோ பொறாமையையும் வாழ்க்கையில் வீழ்ச்சியையுமே கொண்டுவரும் என்பதையும் அறிந்திருக்கிறோம்.
யோவான் 7:21-23, எபி.10:25, கலா.6:12 1 யோவான் 1:3,7.
2. வச.2 - இப்படிப்பட்ட கர்த்தருக்குள்ளான சகோதர சிநேகமும் ஐக்கியமும் தேவனுக்குப் பிரியமான செயலாக இருக்கிறபடியால் ஒரு பரிபூரண அபிஷேகத்தையும் சாட்சியுள்ள ஜீவியத்தையும் கொடுக்கும் என்பதை ஆசாரியனாகிய ஆரோன் தலைமீது ஊற்றப்பட்டு அவனது சரீரம் முழுவதும் இறங்கும் நல்ல தைலத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
3. வச.3 - எர்மோன் என்னும் சீயோன் மலைமீது வறட்சியான கோடை காலத்திலும் பனி இறங்கி ஈரப்பதத்தை உண்டாக்கும்.அதுபோல தேவ மக்களாகிய சகோதரர்களின் ஐக்கியம் வறட்சியான நிலமையை மாற்றி செழிப்பை தரும்.
உபா.4:48, ஏசாயா 41:17,18, 44:3, 58:11.
ஆகவே, தேவ பிள்ளைகளாகிய சகோதரர்கள் ஐக்கியம் உள்ள இடத்தில் கர்த்தர் நிறைவான ஆசீர்வாதத்தையும், ஒரு உயிரோட்டமான ஆவிக்குரிய சரீர வாழ்க்கையையும் கட்டளையிட்டு நித்திய ஜீவனையும் அருளுகிறார்.ஏசாயா 35:1,2,10.
Author: Rev. Dr. R. Samuel