முக்கியக் கருத்து
- கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் தீமைக்கு பயப்படாமல் பாக்கியவானாக இருப்பான்.
- துன்மார்க்க மனுஷன் முறுமுறுக்கிறவனாகவும் ஏமாற்றமடைந்தவனாகவும் இருப்பான்.
1. (வச.1-9) பாக்கியவானாகிய மனுஷன்
1.1. கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிற மனிதனே செம்மையான மனிதன். இப்படிப்பட்ட மனிதன் ஒரு பாக்கியசாலி. அவனுடைய குணங்கள் சிலவற்றை சங்கீதக்காரன் பட்டியலிட்டிருக்கிறான்.
* இரக்கமும், மனஉருக்கமும் படைத்து ஏழைகளுக்கு உதவி செய்கிறவனாயிருப்பான் (4,5,9).
* துர்ச்செய்தி கேட்டாலும், தான் கர்த்தரை நம்பியிருக்கிறபடியால் பயப்படான் (7).
* நீதியாக நடந்து நியாயத்தை செய்வான் (4,5).
விசுவாசிகளாகிய நம்முடைய குணாதிசயங்கள் இதற்கு ஒத்திருக்கிறதா? 1 கொரி.5:8.
1.2. இந்தவிதமான பாக்கியமான மனுஷனுக்குக் கிடைக்கும் பலன்களும் சங்கீதக்காரனால் பட்டியலிடப்பட்டுள்து
* பூமியில் அவன் சந்ததி பலத்திருக்கும் (2)
* ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும் (3)
* இருள்போன்ற தடைகள் நிறைந்த சூழ்நிலைவரும்போது அங்கே வெளிச்சம் உதிக்கும் (4)
* எதிரிகளுடைய தோல்வியை காண்பான் (8)
இது சங்கீதக்காரனின் அனுபவம். நம்முடைய அனுபவமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. யோவான் 11:40
2. (வச.10) ஏமாற்றமடையும் மனிதன்
கர்த்தருக்கு பயப்படாமல் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் துன்மார்க்கமாக நடக்கும் ஒரு மனிதனுடைய எதிர்பார்ப்புகள், ஆசைகள் எல்லாம் நீதிக்கு எதிர்மறையாக இருப்பதால் அவன் ஆசை ஒரு போதும் நிறைவேறாது. அவனுக்கு ஏமாற்றமும் மனமடிவுமே காத்திருக்கும். அவன் தனது பற்களைக் கடித்துகொண்டு வாழ்க்கையில் நொந்து போகும் சூழ்நிலைக்கு தள்ப்படுவான். யாக்கோபு 4:1-4 இந்த வசனங்களை நாம் தியானித்து சங்கீதக்காரன் சொல்ல விரும்பும் சத்தியங்களை அறிந்துகொள்ளலாம்.
Author: Rev. Dr. R. Samuel