வெளிப்படுத்தின விசேஷம்3- விளக்கவுரை
அதிகாரம் - 3 ‘ஏழு சபைகளுக்கு ஆவியானவரின் செய்தி’ ‘Message of the Spirit to seven Churches’ கர்த்தருடைய ஆவியானவர் யோவானுக்கு தரிசனங்கள் மூலம் 7 சபைகளுக்கும் அனுப்பும்படியாக கொடுத்த செய்திகளில் கடைசி மூன்று சபைகளுக்கான செய்திகள் இந்த 3 ஆம் அதிகாரத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது. சர்தை சபைக்கு செய்தி. 1. வாழ்த்து : சர்தை சபைக்குத் தன்னை ஏழு ஆவிகளை உடையவராகவும், ஏழு நட்சத்திரங்களை உடையவராகவும் காண்பித்து, தைரியப்படுத்தி வாழ்த்துகிறார்.(1) வெளி 5:6 2. குறை : இவர்களுடைய தற்போதைய செத்த நிலமையும் கிரியைகளின் நிறைவின்மையும் குறையாக காணப்படுவதை ஒவ்வொன்றாகவே எடுத்துக்காட்டுகிறார் .(1- 3) 3. எச்சரிப்பு : கர்த்தரிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட கிருபை ஆசீர்வாதங்களைக் குறித்து ஜாக்கிரதையாகவும், அவற்றை இழந்துவிடாமல் நினைவுகூரவும் எச்சரிப்பு விடுக்கிறார். (3) 4. பாராட்டு : ஆனாலும் இவர்களில் வஸ்திரம் அசுசிப்படாமல் ஜாக்கிரதையாக மாறுபாடுள்ள சந்ததியினின்று தங்களை காத்துக்கொள்கிறவர்கள் உண்டென்று பாராட்டுகிறார். (4) 5. வாக்கதத்தத்தம் : ஜெயங்கொள்ளுகிறவனுக்கு ஆண்டவர் பரலோக ராஜ்ஜியத்தில் அளிக்கப்போகும் பரிசு, மேன்னை, தகுதி இவைகளாக இருக்கும் என்று வாக்கதத்தத்தம் செய்கிறார். (5) பிலதெல்பியா சபைக்கு செய்தி. குறையே சொல்லப்படாத அற்புத சாட்சிபெற்றது சபை பிலதெல்பியா சபை. ஆகவேதான் இந்த நாட்களிலும் அனேகர் தங்கள் சபைகளுக்கு பிலதெல்பியா சபை என்று பெயர் வைததுக்கொண்டிருப்பதை காணமுடிகிறது. 1. வாழ்த்து :பரிசுத்தமுள்ளவர், சத்தியமுள்ளவர், தாவீதின் திறவுகோலையுடையவர் பிலதெல்பியா சபையை வாழ்த்துகிறார். (7) 2. புகழ்ச்சி : இச்சபைக்கு அவர்கள் கிரியைகளுக்கேற்ற பலன் தருவேன் என்று புகழ்கிறார்.; (8- 10) 3. எச்சரிப்பு : கிரீடத்தைப் பற்றிக்கொண்டிரு என்று எச்சரிப்பின் சத்தமாக புத்தி சொல்கிறார்.(9- 11 ) 4. வாக்குத்தத்தம் : குறைகள் சொல்லப்படாவிட்டாலும், ஓட்டத்தை பொறுமையோடீ ஓடி வெற்றியாக முடித்தால் தான் மேன்மை கிடைக்கும். எனவே, ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் சில மேன்மைகளை ஆண்டவர் வாக்குக் கொடுக்கிறார்.( 12) லவோதிக்கேயா சபைக்கு செய்தி. புகழ்ச்சி, பாராட்டு பெறாத சபையாக காணப்படுவது வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், ஆண்டவர் தகுந்த எச்சரிப்புகளோடு வாக்கத்தத்தம் கொடுக்க தவறவில்லை. ஒருவரும் கெட்டுப்போவது கர்த்தருக்க சித்தமில்லை என்பதையே இது காட்டுகிறது. லவோதிக்கியா சபை இந்த கடைசி நூற்றாண்டுகளின் சபை நிலமையை காண்பிப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. 1. வாழ்த்து : அனலுமின்றி குளிருமின்றி இரண்டும் கெட்ட உறுதியற்ற நிலையில் காணப்படும் லவோதிக்கியா சபைக்கு உறுதியான ‘ஆமென்’ என்பவராக இயேசு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தி வாழ்த்துகிறார். (14) 2 கொரி 1: 19, 20 2. குறை : உலகம், தேவ ராஜ்ஜியம் இவற்றினிடையில் இரண்டும் கெட்ட மாயையான நிலமையில் இருப்பதே இந்த சபையின் முக்கிய குறை என்று ஆவியானவர் தெரிவிக்கிறார்.(15- 17) மத்தேயு 6: 24 3. எச்சரிப்பு :லவோதிக்கியா சபை தனது பரிதாபகரமான நிலமையிலிருந்து மீண்டு வரவேணடுமானால் தன்னிடமிருந்து 4. வாக்குத்தத்தம் : மிகவும் கடுமையான வார்த்தைகளால் லவோதிக்கியா சபையை கண்டித்திருந்தாலும் கடைசியாக எல்லா சபைகளுக்கும் அளித்த அற்புத வாக்குத்தத்தஙகளை அளிக்கிறார். ஆண்டவருடைய நேசம் அவருடைய கண்டிப்பிலும் இந்த சபை மனந்திரும்பி வரவேணடும் என்று எச்சரிப்பு கொடுத்ததிலும் கடைசியாக வாக்குத்தத்தம் அளித்ததிலும் தெரிகிறது. ( 20- 22) ஓவ்வொரு சபைக்கும் கொடுக்கப்பட்டுள்;ள செய்திகளில் காணப்படும் முக்கியக் கூறுகளை பட்டியலிட்டுப் பார்க்கலாம்: Author: Rev. Dr. R. Samuel
- ஏழு ஆவிகள் ஆட்டுக்குட்டியானவர் மேலுள்ள ஆவியின பரிபூரணத்துவம், பூலோகம் முழுவதும் காணக்கூடிய சர்வ வியாபகத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஏசாயா 11;: 2,மல் 2: 15, யோவான் 3: 34,அப் 10: 38,
- ஏழு நட்சத்திரங்கள் பூரணமான ஊழியர்கள்- தானி 12: 3, எபேசி 4: 11, 12
அ) செத்த நிலை - எபே 2: 1, யூதா 12
உள்ளான வாழ்க்கை மரித்த நிலை- மத் 23:27, யோவான் 11: 25
ஆ) கிரியைகளின் குறைவு - சங் 62: 9, தானி 5: 27, 2 கொரி 9: 6, தீத்து 1: 5,
- பெற்றுக்கொண்டதை கைக்கொள்
- மனந்திரும்பு
- விழித்திரு
எரே 48: 10, நீதி 6: 6,9, 10. மத் 25: 5, 26: 41, எபே 5: 14
- உண்மையுள்ளவர்கள் சிலராயினும் கர்;த்தர் பாராட்டுகிறார்.
யூதா 23, அப் 2: 40, 2 தீமொத் 2: 22
- வெண்வஸ்திரம் - வெளி 19: 8
- ஜீவ புத்தகத்தில் பெயர் – யாத் 32: 32, தானி 12: 1, லூக்கா 10: 20, பிலி 4: 3, எபி 12: 23
- பிதா, தூதர்கள்முன் சாட்சி – மத் 10: 32,33, லூக்கா 12: 8
- பரிசுத்தமுள்ளஇ அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளும் சபைக்கு இவ்விதமாக வெளிப்படுகிறார். அப் 3: 14, 1 யோவான் 5: 20,
- திறக்கவும் பூட்டவும் அதிகாரமுள்ளவர். இதற்கு பல விளக்கங்கள் உண்டு. தமது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்தை திறந்து கொடுக்கவும், சாபத்தை மூடிப்போடவும் அதிகாரம உள்ளவர் இவர். மேலும், தாவீதின் நகரமாகிய புதிய எருசலேமில் ஒருவரை அனுமதிக்கவும், அனுமதி மறுக்கவும இவர் ஒருவருக்கே அதிகாரம் உண்டு. யோபு 12: 14, ஏசாயா 1: 18, 9: 7, 22: 22, மத் 16: 19.
கொஞ்ச பெலனிருந்தும் வசனத்தை உறுதியாய் கைக்கொள்கிறாய்என்று புகழ்கிறார். மத் 17: 20, 25: 21, நியாயாதி 6: 14- 19.
- ஆகவே, திறந்த வாசலை பெற்றாய் 1 கொரி 16: 9
- சாத்தான் உனக்கு பணிவான் ஏசாயா 45: 14, 60: 14, 2பேதுரு 2: 9.
- பொறுமையின் வசனத்தை காத்துக்கொண்டாய் பிர 7: 8, லூக்கா 8: 15, 21: 19
- சோதனை வரும், சாத்தான் வருவான் 1 தெச 1: 10, 3: 2- 4
- கிரீடத்தை விடாதே- நான் தப்புவிப்பேன் யோவான் 16: 32, 33.
- ஆலயத்தின் தூணாக்குவேன் 1 இராஜா 7: 21, கலா 2: 9, 1 தீமொத் 3: 15
இங்கு சபைக்குத்தூணாக இருந்தால்தான் தேவராஜ்ஜியத்தில் தூணாயிருக்க முடியும்
- புதிய நாமங்கள் கொடுக்கப்படும். எபே 2: 20, 21. எபி 12: 22, 23.
- மாயையான பொய்சாட்சியுடைய சபைக்கு உண்மையான மெய்சாட்சியுடையவர் வாழ்த்துகிறார். யோவான் 12: 49, 50
- சர்வ சிருஷ்டியானவர் தகப்பனைபோல நேசித்து வாழ்த்துகிறார். கொலோ 1: 15, 16, சங் 103: 13
சிமிர்னா, பிலதெல்பியா சபைகளுக்கு எதிர்மாறான நிலையில லவோதிக்கியா சபையானது, உலக செல்வத்தில் திரட்சியும், ஆவிக்குரிய ஜீவியத்தில் தரித்திரமுமாக காணப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஓசியா 12: 8
இப்படிப்பட்ட நிலமையிலுள்ள அனேகசபைகளுக்கு நமது ஊக்கமான ஜெபம் தேவை.
பெற்றுக்கொள்ள வேண்டியவற்றை உடனடியாக பெற்றுக்கொள்ளும்படி எச்சரிப்பு விடுக்கிறார். (18, 19) ஏசாயா 55: 1
அ) பொன்னைப்போன்ற விசுவாசம். 1 பேதுரு 1: 7
ஆ) வெண்வஸ்திரமாகிய பரிசுத்தம். ஏசாயா 59: 17, மாற்கு 9: 3
இ) கண்களுக்கு பார்வை. (சரியான சுவிசேஷம், வேத வசனம், பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனை) எபேசி 3: 8, 11.
- வாசலைத்திறந்தால் ஐக்கியம் கொள்வேன். உன் 5: 2, யோவான் 14: 23
- ஜெயங்கொள்ளுகிறவனுக்கு சிங்காசனம். தானி 7: 9, வெளி 20: 4, மத் 19: 28
We can tabulate the;se elements in the messages to each Church verse by verse :
சபை
வாழ்த்து
புகழ்ச்சி
குறை
பாராட்டு
எச்சரிப்பு
வாக்குத்தத்தம்
1.எபேசு
வெளி 2:1
வெளி 2:2- 3
வெளி 2:4
வெளி 2:6
வெளி 2:5
வெளி 2:7
2.சிமிர்னா
வெளி 2:8
வெளி 2:9
வெளி 2:9
வெளி 2:10
வெளி 2:10, 11
3.பெர்கமு
வெளி 2:12
வெளி 2:13
வெளி 2:14,15
வெளி 2:16
வெளி 2:17
4. தியத்தீரா
வெளி 2:18
வெளி 2:19
வெளி 2:20- 23
வெளி
2: 21- 25வெளி
2:24- 29
5. சர்தை
வெளி 3:1
வெளி
3:2- 3வெளி 3:4
வெளி 3: 3
வெளி 3:4- 5
6. பிலதெல்பியா
வெளி 3:7
வெளி 3:8
வெளி
3: 9- 11 வெளி
3:9- 12
7. வோதிக்கியா
வெளி 3:14
வெளி 2:17
வெளி 3:19
வெளி
3:20- 22
8. எபேசு
வெளி 2:1
வெளி 2:2- 3
வெளி 2:4
வெளி 2:6
வெளி 2:1
வெளி 2:1
9. சிமிர்னா
வெளி 2:8
வெளி 2:9
வெளி 2:10
வெளி 2:1
வெளி 2:1
10. பெர்கமு
வெளி 2:12
வெளி 2:13
வெளி 2:14, 15
வெளி 2:1
வெளி 2:1
11. தியத்தீரா
வெளி 2:18
வெளி 2:19
வெளி 2:20-23
வெளி 2:1
வெளி 2:1
12. சர்தை
வெளி 3:1
வெளி 3:4
வெளி
3:2- 3
வெளி 2:1
வெளி 2:1
13. பிலதெல்பியா
வெளி 3:7
வெளி 3:8
வெளி 2:1
வெளி 2:1
14.லவோதிக்கியா
வெளி 3:14
வெளி 3:17
வெளி 3:18
வெளி 2:1
வெளி 2:1
Author: Rev. Dr. R. Samuel