பல கலாச்சாரங்களில் விதவைகள் அபசகுனமாகக் கருதப்படுகிறார்கள். சில கலாச்சாரங்களில் அவர்கள் கணவனை கொல்ல வந்த பேய் பிசாசு என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள். இந்தியாவில் சதி நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்கள் உள்ளன, கணவரின் தகனம் நடந்தபோது அவர்களின் மனைவிகளும் உயிருடன் எரிக்கப்பட்டனர். சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, விதவைகள் கண்ணியமோ உரிமையோ இன்றி எளிதில் அடையாளம் காணக்கூடிய உடை மற்றும் சின்னங்களுடன் வாழ அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாதவர்களாய் அடிமைகளைப் போன்று குடும்பங்களுடன் இருக்கலாம் அல்லது விதவைகளுக்கு என்று இருக்கும் வீடுகளுக்குச் சென்று வாழலாம். இன்றும், விதவைகளுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் வரவேற்பு இல்லை என்பதே உண்மை நிலை.
கானாவில் திருமணம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றும் தனது முதல் அற்புதத்தை நிகழ்த்தினார் (யோவான் 2:1-11). யோவானின் கூற்றுப்படி, இந்த அற்புதம் கர்த்தராகிய இயேசுவே மேசியா என்பதை உறுதிப்படுத்தும் ஒரு அடையாளமாகும்.
குறிப்பிடத்தக்க பிரசன்னம்:
மரியாள் திருமணத்திற்கு வந்திருந்தார், மேலும் தம்பதியினர் கர்த்தராகிய இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் அழைத்திருந்தனர். அவள் ஒரு விதவையாக இருந்தபோதிலும், திருமணத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டு, அந்த விழாவில் ஆர்வமாக பங்கேற்றாள். இன்று, கிறிஸ்தவ விதவைகள் கூட ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
அகத்தார்:
மரியாளும் திருமணத்தில் அனைத்தையும் அறிந்தவராய் கவனித்துக் கொண்டிருந்தார். விழாவிலும் விருந்திலும் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியும். கல்யாணத்தில் குறைவுப்பட்ட ரகசியம் தம்பதியருக்கு அவமானமாக மாறக்கூடும் என்ற யோசனையும் இருந்திருக்கும், விருந்தினர்களுக்கு வழங்க வேண்டிய திராட்சைரசமும் முடிந்தது.
பரிந்துரை:
இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்க்க மரியாள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடினார். விதவையாக இருந்தாலும், திருமணத்தில் தன்னார்வமாக பங்கேற்றார்.
ஊழியர்களுக்கு அறிவுரை:
மரியாள் ஊழியர்களுக்கு கட்டளையிடவும் முடிந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழங்கிய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிய அல்லது செயல்படுத்தும்படி அவள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினாள். இது ஒரு திருமண விழாவின் குடும்ப மற்றும் சமூக விழாவில் அவள் ஈடுபாடுடன் கலந்து கொள்வதைக் காட்டுகிறது.
உண்மையான ஆவிக்குரிய வாழ்வு:
விதவைகள் மற்றும் அனாதைகளை கண்ணியத்துடன் நடத்துவதிலும், மரியாதை கொடுப்பதிலும் மற்றும் அவர்களின் தேவைகளை சந்திப்பிலும் தான் உண்மையான ஆவிக்குரிய வாழ்வு (தேவ பக்தி) வெளிப்படுகிறது என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதுகிறார். அநேகமாக, சபை என்று ஆரம்பிக்கப்பட்டவுடன் அவர்கள் ஈடுபட்ட முதல் சமூகப் பணி, விதவைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ததாகும் (அப்போஸ்தலர் 6:1).
வேதத்தின் அடிப்படையில் எனக்கு சரியான அணுகுமுறை உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்