யோவான் 2:1-11

2:1 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.
2:2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
2:3 திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
2:4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
2:5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
2:6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
2:7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
2:8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
2:11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.




Related Topics



திருமண உடன்படிக்கை-Rev. Dr. J .N. மனோகரன்

சமீபத்தில் ஒரு பிரபலம் இவ்வாறாகக் கூறினார்; "திருமணம் என்பது ஒரு காலாவதியான அமைப்பு". மற்றொருவர்; "மகிழ்ச்சியான திருமணம் என்ற ஒன்று இல்லை"...
Read More




திருமணத்தில் விதவை-Rev. Dr. J .N. மனோகரன்

பல கலாச்சாரங்களில் விதவைகள்  அபசகுனமாகக் கருதப்படுகிறார்கள்.  சில கலாச்சாரங்களில் அவர்கள் கணவனை கொல்ல வந்த பேய் பிசாசு என்று குற்றம்...
Read More



மூன்றாம்நாளிலே , கலிலேயாவிலுள்ள , கானா , ஊரிலே , ஒரு , கலியாணம் , நடந்தது; , இயேசுவின் , தாயும் , அங்கேயிருந்தாள் , யோவான் 2:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 2 TAMIL BIBLE , யோவான் 2 IN TAMIL , யோவான் 2 1 IN TAMIL , யோவான் 2 1 IN TAMIL BIBLE , யோவான் 2 IN ENGLISH , TAMIL BIBLE John 2 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 2 TAMIL BIBLE , John 2 IN TAMIL , John 2 1 IN TAMIL , John 2 1 IN TAMIL BIBLE . John 2 IN ENGLISH ,