செல்ஃபி கலாச்சாரத்தில் சுய-முக்கியத்துவம் என்பது ஒரு வழக்கமாகிவிட்டது; அது மாத்திரமல்ல அதை மற்றவர்களும் அங்கீகரிக்க வேண்டும், ஒப்புக்கொள்ள வேண்டும் மற்றும் விரும்ப வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகவும் சமூக ஊடகங்களில் ஒரு விதிமுறையாகவும் மாறி விட்டது. ஒவ்வொரு நபரும் ஒரு விஐபி (மிக முக்கியமான நபர்) அல்லது விவிஐபி (மிக மிக முக்கியமான நபர்) போல நடத்தப்பட விரும்புகிறார்கள். விஐபிகள் சாமானியர்களிடமிருந்து வித்தியாசமாக நடத்தப்பட விரும்புகிறார்கள், இது அவர்களின் முன்னுரிமை மற்றும் கௌரவத்தை அதிகரிக்கும்.
விஐபி:
விஐபி என்ற வெறிக்கு மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள், அவர்கள் தேவனின் கரங்களில் இருக்கிறார்கள் (WIP). “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (எபேசியர் 2:10). சீஷர்களை நற்கிரியைகளுக்கு மாற்றும் முகவர்களாக மாற்ற தேவன் அவர்களின் வாழ்க்கையில் செயல்படுகிறார். அவர்கள் செய்யும் நல்ல செயல்கள் அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் மதிப்பு சேர்க்கிறது, சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது, மேலும் அவர்கள் பின்பற்றுவதற்கும் அதுபோல செய்வதற்கும் உலகிற்கு முன்மாதிரியாக மாறுகிறார்கள்.
குயவன்:
தேவன் குயவர் என்றும், அவருடைய எண்ணம், நோக்கம் மற்றும் பாவனைக்கு ஏற்ப பானையை வடிவமைக்கிறார் என்றும் எரேமியா தீர்க்கதரிசி எழுதுகிறார் (எரேமியா 18:1-10). அதுபோலவே, தேவன் ஒரு விசுவாசியின் வாழ்க்கையை நல்ல செயல்களைச் செய்வதற்குத் தயார்படுத்துகிறார்.
தூய்மை மற்றும் சுத்திகரிப்பு:
ஒரு சுத்திகரிப்பாளர் உலைக்கு அருகில் அமர்ந்து, வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு, தங்கம் அல்லது வெள்ளியை உற்று நோக்குகிறார். அவர் முதலில் உலோகத்தை சுத்திகரிக்கிறார், அதனால் அனைத்து கசடுகளும் அகற்றப்படும். பொறுமையுடன், அவர் தனது மனதில் இருக்கும் நோக்கத்திற்காக தங்கம் அல்லது வெள்ளியை வடிவமைக்கிறார் (மல்கியா 3:3). ஆகவே, சீஷர்கள் சோதனை, தூய்மை மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றின் மூலம் துன்பம் என்னும் அக்கினி வழியாக செல்ல தேவன் அனுமதிக்கிறார்! விசுவாசத்தின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படுகிறது (1 பேதுரு 1:7).
யோபு போல் நம்பிக்கை:
தேவன் யோபு கடுமையான துன்பங்களை அனுபவிக்க அனுமதித்தார், அவருடைய பாவத்தின் காரணமாக அல்ல, ஆனால் அவர் நீதியுள்ளவர் என்பதை நிரூபிக்க. குற்றம் சாட்டுகிற சாத்தான் கூட வெட்கப்படுவான். யோபு தன் துன்பத்தைப் பற்றி சிந்தித்து, பொன்னாக விளங்குவேன் என்று கூறுகிறார் (யோபு 23:10).
வாக்குத்தத்தம்:
எந்தவொரு நபருக்கும் என்ன நடக்கிறது என்பதில் இருந்து வேறுபட்ட அசாதாரண சூழ்நிலைகள் அல்லது சோதனைகள் இருக்காது. அதற்கும் நடுவில் தேவன் தப்பிக்க ஒரு வழியை உருவாக்குவார் (1 கொரிந்தியர் 10:13).
நான் கர்த்தருக்குள் யார்?
Author: Rev. Dr. J .N. மனோகரன்